
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இறுதியாக சில வாரங்களுக்கு பிறகு முழுமையான சியரா எஸ்யூவி விலைப் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அறிமுக ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.21.29 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sierra Complete Price list
இந்த புதிய சியரா காரில் ஸ்மார்ட் (Smart), ப்யூர் (Pure), அட்வென்ச்சர் (Adventure), மற்றும் அக்கம்பிளிஷ்டு (Accomplished) என நான்கு முக்கியப் பிரிவுகளில் 7 விதமாக கிடைக்கிறது.
| Engine | 1.5-litre NA petrol | 1.5-litre turbo-petrol | 1.5-litre diesel | ||
| Transmission | 6-speed manual | 7-speed DCT | 6-speed AT | 6-speed manual | 6-speed AT |
| Smart+ | Rs 11.49 lakh | — | — | Rs 12.99 lakh | — |
| Pure | Rs 12.99 lakh | Rs 14.49 lakh | — | Rs 14.49 lakh | Rs 15.99 lakh |
| Pure+ | Rs 14.49 lakh | Rs 15.99 lakh | — | Rs 15.99 lakh | Rs 17.99 lakh |
| Adventure | Rs 14.49 lakh | Rs 16.79 lakh | — | Rs 16.49 lakh | — |
| Adventure+ | Rs 15.99 lakh | — | Rs 17.99 lakh | Rs 17.19 lakh | Rs 18.49 lakh |
| Accomplished | Rs 17.99 lakh | — | Rs 19.99 lakh | Rs 18.99 lakh | Rs 19.99 lakh |
| Accomplished+ | — | — | Rs 20.99 lakh | Rs 20.29 lakh | Rs 21.29 lakh |
பழைய சியராவின் அடையாளமான பாக்சி ஸ்டைலுடன், மிகவும் நவீனத்துவமான வசதிகளுடன், சற்று பெரிய கண்ணாடி சாளரத்தை பெற்று தோற்றம் மாறாமல், ஆனால் மிகவும் நவீனமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில், பயணிகளுக்குப் பிரமிக்க வைக்கும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (India Book of Records) இடம்பிடித்துள்ள சியரா, அதன் புதிய ‘ஹைப்பர்யான்’ (Hyperion) பெட்ரோல் இன்ஜின் வழங்கிய வியக்கத்தக்க மைலேஜ் மட்டுமல்லாமல், மணிக்கு 222 கிமீ வேகத்தை எட்டுவதனை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ‘நாட்ராக்ஸ்’ (NATRAX – National Automotive Test Tracks) சோதனைத் தளத்தில், கடந்த நவம்பர் 30, 2025 அன்று நடைபெற்ற 12 மணி நேர தொடர் ஓட்டத்தில், டாடா சியரா லிட்டருக்கு 29.9 கிமீ என்ற பிரம்மாண்டமான மைலேஜை எட்டி சாதனை படைத்துள்ளது. பிக்சல் மோஷன் குழுவினரால் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து ஓட்டப்பட்ட இந்த கார், ஓட்டுநர்களை மாற்றுவதற்காக மட்டுமே நிறுத்தப்பட்டது. இந்த சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையின் பின்னணியில் இருப்பது டாடாவின் புதிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஹைப்பர்யான் இன்ஜின் 160 PS மற்றும் 255Nm வெளிப்படுத்துகின்றது.

