Categories: Car News

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

tata tiago wizz edition automobile tamilanதோற்ற அமைப்பில் கூடுதல் வசதிகளை பெற்ற டியாகோ விஸ் லிமிடேட் ஸ்பெஷல் எடிசன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் கிடைக்கின்றது. டியாகோ எஞ்சின் பவர் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

டாடா டியாகோ விஸ்

நடுத்தர ரக XM வேரியன்ட் மாடலை பின்னணியாக கொண்டு கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் கருப்பு நிற கூறையுடன், சிவப்பு நிற கிரில், சிவப்பு வண்ண கலவை பெற்ற வீல் கவர், கருப்பு நிற ORVM, ரூஃப் ரெயில் ஆகியவற்றுடன் இன்டிரியரில் நேர்த்தியான இருக்கை கவர்கள், ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டதாக வந்துள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு டியாகோ கார் மாடலில் 69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டியாகோ விஸ் விலை பட்டியல்

டியாகோ விஸ் பெட்ரோல் – ரூ.4.52 லட்சம்

டியாகோ விஸ் பெட்ரோல் – ரூ.5.30 லட்சம்