Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
June 27, 2019
in கார் செய்திகள்

tata tigor ev

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடலாக டாடா டிகோர் செடான் அடிப்படையில் விற்பனைக்கு ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு விதமான வேரியண்டில் டிகோர் மின்சார கார் வெளியாகியுள்ளது.

முதற்கட்டமாக டாக்சி பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த காரினை தனிநபர் பயன்பாட்டிற்கு விற்பனை வெளியாகவில்லை. குறிப்பாக இந்தியாவின் FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் இந்த காருக்கு ரூ.1.62 லட்சம் சலுகை வழங்கப்படுகின்றது. தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு FAME II திட்டம் செயற்படுத்தப்படவில்லை.

டாடா டிகோர் மின்சார கார்

இந்தியாவில் பரவலாக மின்சார் கார் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், டாக்சி சார்ந்த பயன்பாட்டிற்கு முதற்கட்டமாக டாடாவின் முதல் விற்பனைக்கு வந்த மின்சார கார் மாடலாக டிகோர் விளங்குகின்றது.

இந்த மின்சார காரினை 16.2 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது, இது 30 கிலோவாட் (41 hp) பவரை 4,500 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 105 Nm டார்க் 2,500 ஆர்.பி.எம்மில் வெளிப்படுத்துகின்றது. 72 வோல்ட், 3-கட்ட ஏசி இன்டெக்‌ஷன் மோட்டார் மூலம் முன் சக்கரங்களுக்கு பவரை அனுப்புகிறது.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி திறன் மூலம் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக  142 கிமீ வரை பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு நிலையான ஏசி சார்ஜர் வழியாக 6 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், ஒரு டிசி 15 கிலோவாட் வேகமான சார்ஜர் வாயிலாக இதனை 90 நிமிடங்களில் பெற முடியும்.

இரண்டு விதமாக வழங்கப்பட்டுள்ள வேரியண்ட் டிகோர் EV XM மற்றும் டிகோர் EV XT ஆகும். இரண்டிலும் பொதுவாக AIS-145 அடிப்படை பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இரட்டை முன் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார்கள் இருக்கை பட்டை நினைவூட்டல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள பெட்ரோல் , டீசல் மாடல்களில் உள்ள XM, XT அடிப்படையில் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனில் 14 அங்குல அலாய் வீல், ஹார்மன் நிறுவன 2 டின் ஆடியோ சிஸ்டத்துடன் புளூடூத், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் தொடர்புகள், பவர் விண்டோஸ் மற்றும் பவர் விங் மிரர் போன்றவற்றை கொண்டுள்ளது.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விலை பட்டியல்

டாடா Tigor EV XM – ரூ.9.99 லட்சம்

டாடா Tigor EV XT – ரூ.10.90 லட்சம்

குறிப்பாக இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள ஃபேம் இரண்டாம் கட்ட ஊக்கத் தொகை ரூ.1.62 லட்சம் வழங்கப்பட்டுகின்றது. ஊக்க தொகை பெறாமல் காரின் விலை டிகோர் EV XM மாடல் ரூ.11.61 லட்சம் எனவும், டிகோரின் EV XT விலை ரூ.12.52 லட்சம் ஆகும். சாதாரன டிகோர் பெட்ரோல் மாடலை விட ரூ.4 லட்சம் விலை கூடுதலாக அமைந்துள்ளது.

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Tags: Tata TigorTata Tigor EVடாடா டிகோர்டாடா மோட்டார்ஸ்
Previous Post

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டர் அறிமுகம்

Next Post

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

Next Post

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பற்றி அறிய வேண்டிய 6 முக்கிய தகவல்கள்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version