டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய Xpres பயணிகள் கார் பிராண்டில் வெளியிடப்பட்டுள்ள முதல் மாடலாக XpresT EV விலை ரூ.9.54 லட்சம் முதல் ரூ.10.64 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய மின்சார பேட்டரி காருக்கு ஒன்றிய அரசு வழங்குகின்ற Fame 2 ஊக்கத்தொகை சலுகை உட்படவே விற்பனையக விலை அமைந்துள்ளது. குறிப்பாக எக்ஸ்பிரஸ் டி மாடல் மொபிலிட்டி சேவைகள், கார்ப்பரேட் மற்றும் அரசு, ஃப்ளீட் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய எக்ஸ்பிரஸ் பேட்ஜைக் கொண்டிருக்கும் பாடல்கள், தனிநபர் பயன்பாட்டிற்கும் விற்கப்படும் வாகளங்களில் இருந்து மாறுபட்டதாக வர்த்தகரீதியான மாடல் விளங்கும்.
டாடா XpresT மின்சார கார் நுட்பவிபரம்
பேஸ் வேரியண்டில் உள்ள XM,XZ என இரண்டும் 16.5 கிலோவாட் பேட்டரி பேக் உடன் 165 கிமீ ரேஞ்சுடன் வருகின்றது. அதே நேரத்தில் டாப் மாடல்கள் 213 கிமீ ரேஞ்சு பெற்று 21.5 கிலோவாட் பேட்டரி உடன் வந்துள்ளது.
30 kW (40.2 BHP) மின்சார மோட்டாரிலிருந்து, 105 Nm டார்க் உருவாக்குகிறது. இதில் ஒரு வேக டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஈகோ மற்றும் ‘ஸ்போர்ட்’ டிரைவ் மோட்களுடன் வரும் எக்ஸ்பிரஸ் டி மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகும்.
90 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் சார்ஜிங்கை 16.5 கிலோவாட் பேட்டரியும் மற்றும் 21.5 கிலோவாட்டிற்கு 110 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டுள்ளது. விரைவு சார்ஜிங் அல்லது 15A சார்ஜர் போதுமானதாகும்.
Tata XpresT EV price list
Variant | Price |
---|---|
XpresT 165 XM | Rs. 9.54 lakhs |
XpresT 165 XZ | Rs. 10.04 lakhs |
XpresT 213 XM+ | Rs. 10.14 lakhs |
XpresT 213 XZ+ | Rs. 10.64 lakhs |
Price are ex-showroom and inclusive of Fame 2 incentive