இந்திய சந்தையில் 2025 ஆம் ஆண்டிற்குள் டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் 2 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், 2024 முதல் எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் என மூன்று மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் தனது தொழிற்சாலை அமைக்க முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
Tesla India
ஜனவரியில் நடக்கவிருக்கும் வைப்ரன்ட் குஜராத் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முக்கிய அறிவிப்பு வெளிவரலாம். ஆனால் ஆலை எங்கே அமையும் என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.
டெஸ்லா எந்தவொரு ஆலையிலும் ஆரம்ப குறைந்தபட்ச முதலீட்டை சுமார் 2 பில்லியன் டாலர்கள் செய்ய வாய்ப்புள்ளது. பேட்டரியின் விலையை குறைக்க உள்நாட்டில் பேட்டரியை ஒருஙுகிணைக்க ஆலையும் நிறுவ வாய்ப்புகள் உள்ளது.
டெஸ்லா இந்தியா வருகை குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் இறக்குமதி வரி பயணிகள் வாகனங்களுக்கு அதிகமாக உள்ளதை தொடர்ந்து டெஸ்லா குறைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சில சலுகைகளுடன் அடுத்த ஆண்டில் டெஸ்லா கார் இறக்குமதி செய்யப்பட வாயபுகள் உள்ளது.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஜூன் மாதம், டெஸ்லா இந்தியாவில் “குறிப்பிடத்தக்க முதலீட்டை” செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், மஸ்க் 2024 ஆம் ஆண்டில் இந்தியா வரவிருப்பதாக கூறப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பாக டெஸ்லா இந்திய சந்தையில் தயாரிக்கப்பட உள்ள முதல் மாடல் ரூ.18 லட்சத்துக்குள் அமையலாம் என எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.
source – bloomberg.com