இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப்பட்ட 3,35,531 பயணிகள் வாகனங்களில் முதலிடத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 1,43,708 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மே 2023-ல் பயணிகள் வாகனங்கள் 13.99 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்த விற்பனை 3,35,531 எண்ணிக்கையாக இருந்தது. மே 2022-ல் விற்கப்பட்ட 2,94,342 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது.
இந்தியாவின் முதலிடத்தில் உள்ள பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம், 1,43,708 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,24,474 ஆக பதிவு செய்திருந்தது.
இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான, ஹூண்டாய் இந்தியா 48,601 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 42,293 ஆக பதிவு செய்திருந்தது.
Makers | May 2023 | May 2022 | Change % |
Maruti Suzuki | 1,43,708 | 1,24,474 | 15.45 |
Hyundai | 48,601 | 42,293 | 14.91 |
Tata Motors | 45,878 | 43,341 | 6 |
Mahindra | 32,886 | 26,904 | 22 |
Toyota | 19,379 | 10,216 | 89 |
Kia India | 18,776 | 18,718 | 0.26 |
MG Motor | 5,006 | 4,008 | 24.9 |
Honda Cars | 4,660 | 8,188 | 43.09 |
Renault | 4,625 | 5,010 | 6 |
Skoda | 3,547 | 4,604 | – 22.9 |
VW | 3,286 | 3,503 | – 6.19 |
Nissan | 2,618 | 2,181 | 22.85 |
Citroen | 806 | 24 | 3252 |
Jeep | 734 | 924 | – 20.9 |
முதல் 5 இடங்களில் உள்ள மாருதி , ஹூண்டாய், டாடா, மஹிந்திரா மற்றும் டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் 86.8 விழுக்காடு ஒட்டுமொத்த இந்திய சந்தையில் கொண்டுள்ளது.