மாருதி சுசுகி நிறுவனம் முதல் 10 இடங்களில் 7 இடங்களை பிடித்துள்ள நிலையில் முதல் 6 இடங்களை மாருதி பெற்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் மற்ற மூன்று இடங்களை பிடித்துள்ளது, அதன் விபரங்களை இங்கே காணலாம்.

டாப் 10 கார்கள் – ஜூலை 2017

பிரிமியம் ரக செக்மென்டில் விற்பனையில் உள்ள எலைட் ஐ20 காரை வீழ்த்தியிருப்பதுடன் இரண்டாவது இடத்தை 19,153 கார்களை மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார் பெற்றுள்ளது.இதன் போட்டியாளரான ஐலைட் ஐ20 10,017 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

எஸ்யூவி சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா 15,243 அலகுகளை விற்பனை செய்து நான்காவது இடத்திலும் ,இதன் போட்டியாளரான க்ரெட்டா 10,556 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

13 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கார் மாடலாக விளங்கும் ஆல்ட்டோ 26,009 அலகுகளை விற்பனை செய்துள்ளது.

முழுமையான விபர பட்டியலை படத்தில் கீழே காணலாம்.