Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2017-2018 நிதி வருடத்தில் டாப் 5 யூவி கார் மாடல்கள்

by automobiletamilan
April 23, 2018
in கார் செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

இந்தியாவின் நான்கு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பாக யுட்டிலிட்டி வாகன சந்தையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மஹிந்திரா பொலிரோ பட்டியிலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

டாப் 5 யூவி கார்

இந்திய மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் யுட்டிலிட்டி வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2016-2017 நிதி ஆண்டை விட 20.97 சதவீத வளர்ச்சியை ((FY2017: 761,998) பெற்றுள்ளது. கடந்த 2018 நிதி ஆண்டில் 921,780 எண்ணிக்கையில் யூட்டிலிட்டி வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.

பட்டியலில் மாருதி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலாக விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்று சந்தையில் முதல் மாடலாக விறங்குகின்றது. 2018 ஆம் நிதி வருடத்தில் 148,462 என்ற எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

அதனை தொடர்ந்து பிரபலமான ஹூண்டா க்ரெட்டா எஸ்யூவி உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக சந்தையில் முதன்மையான எஸ்யூவி ராஜாவாக விளங்கி வரும் மஹிந்திரா பொலிரோ பட்டியிலில் மூன்றாவது இடத்திலும், அரசியல்வாதிகள் முதல் அதிபர்கள் விரும்பக்கூடிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா நான்காவது இடத்திலும் எர்டிகா 5வது இடத்திலும் உள்ளது.

டாப் 5 யூவி பட்டியல் FY17 & FY18

மாடல்2016-17தர வரிசைமாடல்2017-18
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா108,6401மாருதி விட்டாரா பிரெஸ்ஸா148,462
ஹூண்டாய் க்ரெட்டா96,8992ஹூண்டாய் க்ரெட்டா107,136
டொயோட்டா இன்னோவா79,0923மஹிந்திரா பொலிரோ85,368
மஹிந்திரா பொலிரோ69,3284டொயோட்டா இன்னோவா74,137
மாருதி எர்டிகா63,5275மாருதி எர்டிகா66,141
Tags: டாப் 5 யூவிடொயோட்டா இன்னோவாமஹிந்திரா பொலிரோமாருதி விட்டாரா பிரெஸ்ஸா
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan