2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுக விபரம்

0d6b6 2021 toyota fortuner facelift

வரும் ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் (Fortuner) எஸ்யூவி கார் மாடல் மேம்படுத்த பட்டதாக சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்கின்ற மாடலுக்கு இணையாக அமைந்திருக்கும்.

விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட தோற்ற அமைப்பில் புதிதாக வரவுள்ள  மாடல் புதுப்பிக்கப்பட்ட கிரில் அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல் பெற்று, பின்புறத்தில் மிகவும் தட்டையான எல்இடி விளக்கு கொடுக்கப்பட்டு முந்தைய மாடலைவிட இப்பொழுது சற்று மேம்படுத்தப்பட்ட டிசைன் அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.

ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் இன்டிரியர் தற்போது உள்ள மாடலின் அமைப்பினை தக்க வைத்துக் கொண்டாலும் கூடுதலான பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும். புதிய 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் உள்ளிட்ட வசதிகள் இணைக்கப்பட்டிருக்கும். மற்றபடி சர்வதேச அளவில் கிடைக்கின்ற மாடல்களில் உள்ள 360 டிகிரி வியூ கேமரா, எல்இடி ஆம்பியன்ட் லைட்டிங், 9 ஜே.பி.எல் ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்ட கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டிருக்கும்.

புதிய மாடல் தொடர்ந்து 164 bhp மற்றும் 245 Nm டார்க் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் சர்வதேச அளவில் வந்துள்ள புதிய 201 HP ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 450 Nm டார்க்கினை வழங்கும் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று 4×4 மற்றும் 4×2 டிரைவிலும் கிடைக்க உள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள காரை விட 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கூடுதல் விலையில் அமைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *