Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

10வது ஆண்டு கொண்டாட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD விற்பனைக்கு வெளியானது

by automobiletamilan
September 12, 2019
in கார் செய்திகள்

Toyota Fortuner TRD Celebratory Edition

இந்தியாவில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு செலிபிரேட்டரி எடிஷன் என்ற பெயரில் 2019 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD  விற்பனைக்கு ரூ.33.85 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.  2.8 லிட்டர் டீசல் ஆட்டோமேட்டிக் 4X2 வேரியண்டில் மட்டும் கிடைக்க உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பிரீமியம் எஸ்யூவி பிரிவில் பெற்றுள்ளது. மொத்தமாக இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் ஃபார்ச்சூனர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி மாடலை போன்ற வந்துள்ள புதிய டிஆர்டி செலிபிரேட்டரி எடிஷன் என அழைக்கப்படுகின்றது.

TRD என்றால் Toyota Racing Development என்பது விளக்கமாகும். 177 HP ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 420 Nm டார்க்கினை வழங்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பெற்றதாக வந்துள்ளது. இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக 4×2 டிரைவில் மட்டுமே கிடைக்க உள்ளது.

வெள்ளை நிறத்தில் மேற்கூரை கருப்பு நிறத்தை பெற்றிருப்பதுடன், தோற்ற அமைப்பில் முன்புறத்தில் கருப்பு நிற கிரிலுடன் கூடிய மிக சிறப்பாக கம்பீர தன்மையை வெளிப்படுத்துவதுடன் TRD பேட்ஜினை பெற்றுள்ளதுடன் பக்கவாட்டில் 18 அங்குல அலாய் வீல் மற்றும் டிஆர்டி ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது. பின்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை.

இன்டிரியரில் கருப்பு மற்றும் மெரூன் என இரு நிற கலவை கொண்ட லெதர் இருக்கை பெற்றிருப்பதுடன் ’10 years’ என்ற பேட்ஜ் மற்றும் சிவப்பு நிற  TRD பேட்ஜூம் உள்ளது.  மேலும் இந்த எஸ்யூவி காரில் 7.0 அங்குல தொடுதிரை உடன் கூடிய நேவிகேஷன், தானியங்கி ஐட்லிங் ஸ்டாப் / ஸ்டார்ட் அம்சம், பிட்ச் மற்றும் பவுன்ஸ் கன்ட்ரோலுடன், VSC உடன் பிரேக் அசிஸ்ட், ஏழு ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் உடன் ஈபிடி, ஸ்பீடு ஆட்டோ லாக் மற்றும் பலவற்றையும் கொண்டுள்ளது.

 

Tags: Toyota FortunerToyota Fortuner TRDடொயோட்டா ஃபார்ச்சூனர்
Previous Post

டிவிஎஸ் ஜூபிடர் கிராண்டே ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமானது

Next Post

குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது

Next Post

குறைந்த விலை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விற்பனைக்கு அறிமுகமானது

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version