மாருதி சுசுகி பலெனோ காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட டொயோட்டா கிளான்ஸா காரின் முழுமையான தோற்ற படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இன்டிரியர் தொடர்பான படங்கள் வெளியாகவில்லை.
உற்பத்தி நிலை படமாக வந்துள்ள இந்த காரின் தோற்ற அமைப்பில் ரேடியேட்டர் கிரில் மாற்றம் மற்றும் லோகோ தவிர வேறு எந்த மாற்றங்களும் பலேனோ காரிலிருந்து மேற்கொள்ளப்படாமல் கிளான்சா காரின் முன்புற தோற்றம் அமைந்துள்ளது.
கிளான்ஸா காரின் புகைப்படம்
டொயோட்டா-சுசுகி நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் காராக பெலினோ காரின் அடிப்படையிலான முதல் டொயோட்டாவின் காரினை க்ளான்ஸா என பெயிரிட்டுள்ளது.
புதிதாக வெளிவந்துள்ள படங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் பலேனோ காரின் மெட்டல் சீட், அலாய் வீல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. அடுத்த முன்புற ரேடியேட்டர் கிரில் டொயோட்டா குடும்பத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்றதாகவே அமைந்திருக்கின்றது. இன்டிரியர் தொடர்பான எந்த படங்களும் வெளியாகவில்லை.
5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கும். இந்த காரில் டொயோட்டா Glanza G மற்றும் டொயோட்டா Glanza V என இரு வேரியன்டுகள் மட்டும் கிடைக்க உள்ளது. பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களை நேரடியாக எதிர்க்க உள்ளது.