ரூ.13.94 லட்சத்தில் டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் மாடல் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. க்ரீஸ்ட்டா பெட்ரோல் மாடலில் ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் மெனுவல் கியர்பாக்சிலும் வெளிவந்துள்ளது.
166 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் டார்க் 245Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். Gx, Vx மற்றும் Zx என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். 6 விதமான வகைகளில் பெட்ரோல் விலை ரூ.13.94 லட்சம் முதல் ரூ. 19.86 லட்சம் விலை வெளியாகியுள்ளது.
பெட்ரோல் மாடலின் Gx வேரியண்டில்
3 காற்றுப்பைகள்
16 இன்ச் அலாய் வீல்
7 அல்லது 8 இருக்கை ஆப்ஷன்
மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்
பெட்ரோல் மாடலின் Vx வேரியண்டில்
16 இன்ச் அலாய் வீல்
7 இருக்கை ஆப்ஷன் மட்டுமே
தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு
எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு
கீலெஸ் என்ட்ரி
முனபக்க பனி விளக்கு
மெனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.
பெட்ரோல் மாடலின் Zx வேரியண்டில்
7 காற்றுப்பைகள்
17 இன்ச் அலாய் வீல்
7 இருக்கை ஆப்ஷன்
தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு நேவிகேஷன்
எல்இடி புராஜெக்ட்ர் முகப்பு விளக்கு
கீலெஸ் என்ட்ரி
முனபக்க பனி விளக்கு
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.
இன்னோவா க்ரீஸ்ட்டா பெட்ரோல் விலை பட்டியல்
Sl. No. | Model | Seater | Transmission | Ex-Showroom Price |
---|---|---|---|---|
1 | 2.7 GX MT | 7 | MT |
13,94,057
|
2 | 2.7 GX MT | 8 | MT |
13,98,557
|
3 | 2.7 VX MT | 7 | MT |
16,81,084
|
4 | 2.7 GX AT | 7 | AT |
15,05,057
|
5 | 2.7 GX AT | 8 | AT |
15,09,557
|
6 | 2.7 ZX AT | 7 | AT |
19,86,518
|
டொயோட்டா இன்னோவா க்ரீஸ்ட்டா கார் படங்கள
[envira-gallery id=”7252″]