டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலையை வேரியண்ட் வாரியாக ₹ 25,000 – ₹ 75,000 வரை விலை உயர்த்தப்பட்டு, கூடுதலாக VX (O) என்ற வேரியண்ட் டாப் வேரியண்ட் ZX க்கு கீழாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்னோவா ஹைக்ராஸ் காரில் 172 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 184 ஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் – CVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
இன்னோவா ஹைக்ராஸ் ஹைபிரிட் மைலேஜ் 23.24kpl மற்ற சாதாரன என்ஜின் மைலேஜ் 16.13kpl என உறுதிப்படுத்தியுள்ளது.
2023 Toyota Innova Hycross Price
டொயோட்டா ஒரு புதிய VX (O) வேரியண்டை அறிமுகப்படுத்தியுள்ளது, அது VX மற்றும் ZX டிரிம்களுக்கு இடையில் உள்ளது. 7 இருக்கைகள் ரூ.26.73 லட்சம் மற்றும் 8 இருக்கைகள் கொண்ட மாடல் ரூ.26.78 லட்சம் விலையில், புதிய VX (O) டிரிம் VX மற்றும் ZX டிரிம்களுக்கு இடையே இருந்த ரூ.4.27 லட்சம் விலை இடைவெளியை குறைக்கிறது.
Variants | Old Price | New Price | Difference |
Petrol variants | |||
G 7S | Rs 18.30 lakh | Rs 18.55 lakh | Rs 25,000 |
G 8S | Rs 18.35 lakh | Rs 18.60 lakh | Rs 25,000 |
GX 7S | Rs 19.15 lakh | Rs 19.40 lakh | Rs 25,000 |
GX 8S | Rs 19.20 lakh | Rs 19.45 lakh | Rs 25,000 |
Hybrid powertrains | |||
VX 7S | Rs 24.01 lakh | Rs 24.76 lakh | Rs 75,000 |
VX 8S | Rs 24.06 lakh | Rs 24.81 lakh | Rs 75,000 |
VX (O) 7S (NEW) | – | Rs 26.73 lakh | – |
VX (O) 8S (NEW) | – | Rs 26.78 lakh | – |
ZX | Rs 28.33 lakh | Rs 29.08 lakh | Rs 75,000 |
ZX (O) | Rs 28.97 lakh | Rs 29.72 lakh | Rs 75,000 |