டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது மூன்றாவது தொழிற்சாலையை ரூ.3,300 கோடி முதலீட்டில் கர்நாடகா மாநிலத்தில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி எண்ணிக்கை ஆண்டுக்கு 1,00,000 ஆக இருக்கும், இந்த ஆலையில் முதல் உற்பத்தி 2026 ஆம் ஆண்டில் துவங்க உள்ளது.
இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ள முதல் மாடல் அனேகமாக இன்னோவா ஹைகிராஸ் உட்பட புதிய எஸ்யூவி மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் குறைந்த விலை மாடல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களும் உற்பத்தி செய்யப்படலாம்.
Toyota India
இந்தியாவில் வெற்றிகரமாக 25 ஆண்டுகளை கடந்துள்ள டொயோட்டா நிறுவனம் புதிதாக துவங்க உள்ள ஏற்கனவே பிடாடி அருகில் உள்ள இரண்டு ஆலைகளுக்கு அருகாமையிலே துவங்க திட்டமிட்டுள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தலைமை செயல் அதிகாரி மசகாசு யோஷிமுரா கூறுகையில், ‘எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மொபிலிட்டி நிறுவனமாக, புதிய ஆலையை உருவாக்க கர்நாடகா மாநில அரசுடன் இன்றைய குறிப்பிடத்தக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், அதன் விளைவாக புதிய வேலைவாய்ப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதன் மூலம் சாதகமாக பங்களிக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
டொயோட்டா இந்தியாவில் ஏற்கனவே ஆண்டுக்கு 4 லட்சம் உற்பத்தி இலக்கை கொண்டுள்ளதால், புதிய ஆலை மூலம் ஆண்டு உற்பத்தி திறனை 5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்க உள்ளது.