டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக டொயோட்டா பிராண்டில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் மாருதி பலேனோ ஆகிய மாடல்களும், சுசூகி பிராண்டில் கரோல்லா செடான் காரும் விற்பனை செய்யப்பட உள்ளது.
டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா
டொயோட்டா இந்தியா பிரிவில் , இந்திய சந்தையில் பிரசத்தி பெற்ற மாடல்களாக விளங்குகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மற்றும் பிரிமியம் ரக பலேனோ ஹேட்ச்பேக் ஆகிய இரு மாடல்களையும் டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்ய உள்ளது.
டொயோட்டா பிராண்டில் இந்த இரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டாலும் விலை மாருதி நிறுவனத்தின் அறிமுகத்திற்கு ஏற்றதாகவே இருக்கும் என்பதனால் டொயோட்டா விற்பனை மிகவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கிராஸ் பேட்ஜிங் செய்யப்பண்ட உள்ள விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ மாடல்களின் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியர் ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் டொயோட்டா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ ஆகிய கார்கள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் நெக்ஸா டீலர்கள் வாயிலாக பிரிமியம் ரக டொயோட்டா கரோல்லா செடான் கார் மாருதி கரோல்லா அல்டிஸ் மாடலாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களின் கூட்டணியின் காராணமாக டொயோட்டா நிறுவனம் மிக சிறப்பான சந்தை மதிப்பினை இந்திய சந்தையில் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகின்றது.