டொயோட்டா விற்பனை செய்து வருகின்ற எர்டிகா ரீபேட்ஜிங் ரூமியன் எம்பிவி 7 இருக்கை காரின் அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு விலை ரூ.10.44 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.13.62 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது.
6 ஏர்பேக்குகளை அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக இஎஸ்பி, ஏபிஎஸ் உடன் இபிடி, பிரேக் அசிஸ்ட், 3 புள்ளி சீட் பெல்ட், அதிவேக எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹீல் ஹோல்டு அசிஸ்ட் என அடிப்படையான பாதுகாப்பினை பெற்றிருக்கின்றது.
மற்ற வசதிகளில் தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் 1.5லிட்டர் பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் பெற்று 103bhp பவர் மற்றும் 136.8Nm டார்க் வழங்கும் நிலையில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. தொடர்ந்து சிஎன்ஜி ஆப்ஷனில் 87.8hp மற்றும் 121.5Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
ரூமியன் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 20.51 கிமீ ஆகவும், ஆட்டோமேட்டிக் 20.11 கிமீ ஆகவும் இறுதியாக சிஎன்ஜி ஒரு கிலோ எரிபொருளுக்கு 26.11 கிமீ தரும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இன்டீரியரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியுடன் டொயோட்டா ஐ-கனெக்ட் சார்ந்த கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றுள்ளது.
இந்த மாடலுக்கு போட்டியாக குறைந்த விலையில் ரெனால்ட் ட்ரைபர், மாருதி சுசூகி எர்டிகா, கியா காரன்ஸ், காரன்ஸ் கிளாவிஸ் போன்றவை உள்ளது.