மாருதி எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு டெயோட்டா ருமியன் எம்பிவி காரின் விலை ரூ.10.29 லட்சம் முதல் ரூ. 13.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எர்டிகா மாடலை விட ரூ.51,000 முதல் ரூ.61,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படும் நிலையில் ருமியன் காரின் டெலிவரி செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
Toyota Rumion price
7 இருக்கை கொண்ட கேரன்ஸ், எர்டிகா, XL6 காரை எதிர்கொள்வதுடன் குறைந்த விலை ரெனால்ட் ட்ரைபர் மாடலையும் எதிர்கொள்ளுகின்ற ருமியன் காரில் 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகவும் கிடைக்கின்றது.
ருமியன் கார் மைலேஜ் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.30kpl மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷன் பெறும் பொழுது ருமியன் CNG பயன்முறையில் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5 ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது.
அனைத்து ருமியன் வேரியண்டிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக இரண்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ISOFIX குழந்தை இருக்கை அம்சம் (இரண்டாவது வரிசை) சீட் பெல்ட் ரிமைன்டர் (அனைத்து இருக்கைகளும்), பின்புற பார்க்கிங் சென்சார் உள்ளது.
TOYOTA RUMION PRICE | |
---|---|
Variant | Trim |
S | Rs 10.29 lakh |
S AT | Rs 11.89 lakh |
G | Rs 11.45 lakh |
V | Rs 12.18 lakh |
V AT | Rs 13.68 lakh |
S CNG | Rs 11.24 lakh |
மேலும் படிக்க – டொயோட்டா ருமியன் வேரியண்ட் விபரம்