டொயோட்டா கிளான்ஸா

இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற குறைந்த விலை எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவா கார்களின் விற்பனை நிறுத்திக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமே இந்த கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆகும்.

2010 ஆம் அறிமுகம் செய்யப்பட்ட எட்டியோஸ் செடான் மற்றும் 2011 ஆம் ஆண்டு வெளியான எட்டியோஸ் லிவா போன்ற கார்களில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கையில் 70 சதவீதம் எட்டியோஸ் டீசல் கார்களும், 63 சதவீதம் லிவா டீசல் கார்களும் விற்பனை ஆகியுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ் 6 நடைமுறையின் காரணமாக 1.4 லிட்டர் டீசல் என்ஜின் உற்பத்தி செலவு அதிகரிக்கின்ற காரணத்தால் கைவிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

1.4 லிட்டர் D4D டீசல் என்ஜின் எட்டியோஸ். எட்டியோஸ் லிவா, எட்டியோஸ் கிராஸ், கரோல்லா அல்டிஸ் மற்றும் பிளாட்டினம் எட்டியோஸ் போன்ற மாடல்களில் இடம்பெற்றுள்ளது. எனவே, இந்த மாடல்களில் டீசல் என்ஜின் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

குறைவான விலை எட்டியோஸ் வரிசையின் விற்பனையில் டீசல் என்ஜின் முக்கிய பங்கு வகிப்பதனால் இந்த என்ஜினை கைவிட உள்ளதால் எட்டியோஸ் வரிசையை முழுதாக நீக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒரு வேளை டீசல் என்ஜின் பெற்ற மாடல்கள் மட்டும் நீக்கப்படலாம். சமீபத்தில், மாருதி நிறுவனத்தின் பலேனோ காரை ரீபேட்ஜ் செய்த கிளான்ஸா பெயரில் டொயோட்டா வெளியிட்டுள்ள நிலையில், இந்த மாடல் அபரிதமான வரவேற்பினை பெற்று வருகின்றது.

உதவி – etauto, autocarindia