• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

ரூ.79.5 லட்சத்தில் டொயோட்டா வெல்ஃபயர் இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
26 February 2020, 12:38 pm
in Car News
0
ShareTweetSend

toyota vellfire

ஆடம்பர பிரியர்களுக்கான எம்பிவி காராக டொயோட்டா வெல்ஃபயர் ரூ. லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிரீமியம் வசதிகளை பெற்ற இந்த காருக்கு பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல் மூன்று மாதங்களுக்கான இந்திய விற்பனையை நிறைவு பெற்றுள்ளது.

முதல் மூன்று மாதங்களில் விற்பனை செய்யப்பட உள்ள 180 யூனிட்டுகளுக்கு முன்பதிவு நிறைவுள்ளது. 180 முன்பதிவுகளில் 20 சதவீதம் ஹைத்திராபாத் நகரத்தில் உள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெட்ரோல்-ஹைப்ரிட் பவர் டிரெய்னுடன் வந்துள்ள வெல்ஃபயரில் 2.5 லிட்டர் என்ஜின் அதிகபட்சமாக 117 ஹெச்பி பவர்  மற்றும் 198 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. ஆல் வீல் டிரைவ் வசதியுடன் சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக விளங்குகின்ற இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 16.5 கிமீ ஆகும்.

வெல்ஃபயரில் எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளகுகள், நேர்த்தியான முன் பம்பர் மற்றும் கிரில், பனி விளக்குகளுக்கான முக்கோண ஹவுசிங் போன்றவற்றை பெற்று கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இன்டிரியரில் கருப்பு நிற டேஸ்போர்டினை பெற்று நேர்த்தியான முறையில் சொகுசு தன்மைகளை பெற்ற 7 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

வெல்ஃபயர் காரில் 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற இருக்கை பயணிகளுக்கு 10.2 அங்குல திரை பெற்ற பொழுதுபோக்கு தொகுப்பு மற்றும் மற்றும் 360 டிகிரி சரவுண்ட்-வியூ கேமரா கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டொயோட்டா வெல்ஃபயர் விலை ரூ.79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா -கேரளா தவிர) ஆகும்.

Tags: Toyota Vellfire
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 7.40 லட்சம் ஆரம்ப விலையில் 2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

கியா சிரோஸ் EV ஆரம்ப விலை ரூ.13.49 லட்சம் மட்டுமே.!

2026 மாருதி சுசூகி பிரெஸ்ஸா காரின் விரிவான BNCAP ஸ்கோர் கார்டு!

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version