யாரீஸ் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டொயோட்டா யாரீஸ் கிராஸ் சிறிய எஸ்யூவி மாடல் முதற்கட்டமாக ஐரோப்பா சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்தியா வருகை குறித்து எந்த தகவலும் இல்லை.
பிரான்சில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ள புதிய யாரீஸ் கிராஸ் காரின் தோற்ற அமைப்பு ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள புதிய யாரிசின் அடிப்படையில் டொயோட்டாவின் பாரம்பரிய வடிவ எஸ்யூவி தாத்பரியத்தை பெற்று மிக நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற C-HR எஸ்யூவிக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள இந்த மாடல் யாரீஸ் காரின் அதே நீளம் (4,180mm) மற்றும் வீல்பேஸ் (2,560mm) கொண்டுள்ளது.
மிக நேர்த்தியாக காரின் மேற்பகுதி முழுமையாக கருமை நிறத்தைப் பெற்று நேர்த்தியாக 18 அங்குல் வீல் கொண்டு கருப்பு நிற வீல் ஆர்சு போன்றவை எல்லாம் இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு இன்டிரியரில் மிதிக்கும் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிகவும் தாராளமான இடவசதி கொண்டு மிக நேர்த்தியான வண்ணங்களை பெற்றுள்ளது.
யாரீஸ் க்ராஸ் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்த ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 116 ஹெச்பி பவரை வழங்குகின்றது.
முதற்கட்டமாக ஐரோப்பாவில் அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு செல்ல உள்ள டொயோட்டா யாரீஸ் கிராஸ் இந்தியா வருகை குறித்து எந்த தகவலும் இல்லை.