Automobile Tamilan

குறைந்த விலை எஸ்யூவிகளின் ஆன்ரோடு விலை பட்டியல் – பிப்ரவரி 2024

சிறிய எஸ்யூவி

இந்திய சந்தையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கின்ற குறைந்த விலை சிறிய எஸ்யூவி கார்களில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள மாடல்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

துவக்க நிலை எஸ்யூவி பிரிவில் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றை பற்றி மட்டும் இந்த பகிர்வில் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மேக்னைட் , கிகர் சிறிய ரக மாடல்களை தவிர காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு கடும் சவாலினை வழங்குகின்றது.

2024 Tata Punch

பிரசத்தி பெற்ற முதன்மையான எஸ்யூவி மாடலாக உள்ள டாடா பஞ்ச் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.20 வரை உள்ளது.  1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜினை கொண்டிருக்கின்ற பஞ்ச் எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட் 86hp மற்றும் 113Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.  இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் Punch மைலேஜ் 20.09 Kmpl (MT), மற்றும் 18.8 Kmpl (AMT) ஆகும்.

இதே என்ஜின் CNG முறைக்கு வரும்பொழுது, 73.4 hp மற்றும் 104 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. Punch சிஎன்ஜி மைலேஜ் 26.99 Km/kg ஆகும்.

Tata Punch தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை: 1.2 லிட்டர் பெட்ரோல் ஆன்-ரோடு விலை ரூ.7.42 லட்சம் முதல் ரூ.12.80 லட்சம் வரை கிடைக்கின்றது. அடுத்து, 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆன் ரோடு விலை ரூ.8.66 லட்சம் முதல் ரூ.11.78 லட்சம் வரை கிடைக்கின்றது.

2024 Hyundai Exter

குறைந்த விலை எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரண்டாவது மாடலாக உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர்  6 ஏர்பேக்குகளை பெற்று விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ. 9.16 லட்சம் வரை உள்ளது. எக்ஸ்டரில் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் உள்ளது. ARAI சான்றிதழ் படி 1.2 லிட்டர் பெட்ரோல் எக்ஸ்டர் மைலேஜ் 19.4 Kmpl (MT), மற்றும் 19.2 Kmpl (AMT) ஆகும்.

சிஎன்ஜி பயன்முறையில் 1.2 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. சிஎன்ஜி எக்ஸ்டர் மைலேஜ் 27.1 Km/kg ஆகும்.

Hyundai Exter ஆன்ரோடு விலை: 1.2 லிட்டர் பெட்ரோல் ஆன்-ரோடு விலை ரூ.7.42 லட்சம் முதல் ரூ.12.90 லட்சம் வரை கிடைக்கின்றது. அடுத்து, 1.2 லிட்டர் சிஎன்ஜி ஆன் ரோடு விலை ரூ.10.09 லட்சம் முதல் ரூ.10.98 லட்சம் வரை கிடைக்கின்றது.

2024 Renault Kiger

ரெனால்ட் நிறுவனத்தின் கிகர் எஸ்யூவி மற்றும் மேக்னைட் ஒரே மாதிரியாக என்ஜினை பகிர்ந்துள்ள மாடல் விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை உள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்றுள்ளது.

1.0 லிட்டர் energy பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – Xtronic CVT 2,200-4,000 rpm) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2024 ரெனால்ட் Kiger எஸ்யூவி: 1.0 லிட்டர் ஆன்ரோடு விலை ரூ.7.19 லட்சம் முதல் ரூ.11.35 லட்சம் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆன்ரோடு விலை ரூ.11.09 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கிடைக்கின்றது.

2024 Nissan Magnite

நிசான் இந்தியாவில் விற்பனை செய்கின்ற மேக்னைட் எஸ்யூவி மற்றும் கிகர் இரண்டும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டு விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.10.46 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.

1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. 5 வேக ஏஎம்டி அல்லது EZ-Shift கியர்பாக்ஸ் வந்துள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் மைலேஜ் 19.70kmpl ஆகவும், MT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 19.35kmpl ஆக ARAI-சான்றளித்துள்ளது.

100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. மேனுவல் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 20kmpl ஆகவும், சிவிடி கியர்பாக்ஸ் பெற்ற மாடல் மைலேஜ் 17.4kmpl ஆகும்.

2024 நிசான் Magnite எஸ்யூவி 1.0 லிட்டர் ஆன்ரோடு விலை ரூ.7.20 லட்சம் முதல் ரூ.10.40 லட்சம் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆன்ரோடு விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.13.83 லட்சம் வரை கிடைக்கின்றது.

2024 Citroen C3

சிட்ரோன் நிறுவனம் துவக்க சந்தையில் வழங்குகின்ற C3 எஸ்யூவி விலை ரூ.6.16 லட்சம் முதல் ரூ.9.08 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை உள்ள மாடல்களில் 82 ps (60 kw) பவர், 115Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 110 ps (81 kw) பவர், 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனை பெற்று 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக மேனுவல் மட்டுமே பெற்று ஆடோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவில்லை.

சுமார் 10 வேரியண்டுகளில் உள்ள சிட்ரோன் சி3 மைலேஜ் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக இரண்டு என்ஜினும் பெற்றுள்ளது. 2540 மிமீ வீல் பேஸ் பெற்று 315 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட்ஸ்பேஸ் உள்ள சி3 மாடலில் ஏபிஎஸ், இபிடி, ரியர்வியூ கேமரா உள்ளிட்ட வசதிகளுடன் இரண்டு முன்பக்க ளர்பேக்குகளை பெற்றுள்ளது.

சிட்ரோன் C3 ஆன்ரோடு விலை: 1.2 லிட்டர் பெட்ரோல் ஆன்-ரோடு விலை ரூ.7.45 லட்சம் முதல் ரூ.9.61 லட்சம் வரை கிடைக்கின்றது. அடுத்து, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆன் ரோடு விலை ரூ.10.12 லட்சம் முதல் ரூ.10.88 லட்சம் வரை கிடைக்கின்றது.

கொடுக்கப்பட்டுள்ள ஆன் ரோடு விலை கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது மாறுபடக்கூடும்.

Exit mobile version