Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

நிசான் மேக்னைட் குரோ எடிசன் டீசர் வெளியானது

by automobiletamilan
September 14, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

Nissan Magnite Kuro edition teaser

முழுமையான கருப்பு நிறத்தை பெற உள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் குரோ எடிசன் டீசர் முதன்முறையாக வெளியாகியுள்ளது. தற்பொழுது குரோ எடிசனுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்றது.

ஜாப்பானிய மொழியில் குரோ எடிசன் என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல் முழுமையான கருப்பு நிறத்திலான பாகங்களை கொண்டிருக்கும். குரோ என்பதன் பொருள் கருப்பு ஆகும்.

Nissan Magnite Kuro Edition

மேக்னைட் எஸ்யூவி காரில் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

சாதாரன 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. தற்பொழுது இந்த என்ஜினில் கூடுதலாக ஏஎம்டி கியர்பாக்ஸ் வரவுள்ளது.

வரவிருக்கும் குரோ எடிசனில் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

குரோ எடிசன் மாடலில் அனைத்து கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட உட்புறம் மற்றும் வெளிப்புறம் கொண்டு டாப்-ஸ்பெக் XV டிரிம்களில் வரக்கூடும். விற்பனைக்கு அக்டோபர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan