Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜனவரி 2024ல் வரவிருக்கும் எஸ்யூவி மற்றும் கார்கள்

by MR.Durai
2 January 2024, 8:06 am
in Car News
0
ShareTweetSend

upcoming suv launch list January 2024

நடப்பு ஜனவரி 2024 மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்யூவி மாடல்கள் பற்றி முக்கிய தொகுப்பினை அறிந்து கொள்ளலாம். இந்த மாதம் மெர்சிடிஸ் GLS, ஹூண்டாய் கிரெட்டா, கியா சொனெட், மஹிந்திரா XUV300, XUV400 EV புரோ ஆகியவை விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

2024 Kia Sonet

கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டு கியா சொனெட் எஸ்யூவி மாடலுக்கு ரூ.25,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு புக்கிங் நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு அடுத்த சில நாட்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

5MT, 6MT, 6iMT, 7DCT, மற்றும் 6AT என 5 விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன்  1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜின்களும் தொடர்ந்து கியா சோனெட் பெற்று வந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரை தொடர்ந்து இந்த பிரிவில் உள்ள போட்டியளர்களில் முதல்நிலை ADAS பாதுகாப்பினை பெறுகின்றது. இந்த ADAS  மூலம் முன்னோக்கி மோதல் எச்சரிக்கை மற்றும் முன்னோக்கி மோதல் தவிர்க்க உதவும் வகையில் கார்/ பாதசாரி/ சைக்கிள் ஓட்டுபவர், லேன் கீப் அசிஸ்ட், லேன் ஃபாலோ அசிஸ்ட், லேன் புறப்பாடு எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், ஓட்டுனர் கவன குறைவை எச்சரிக்கை,  வாகனம் புறப்படும் எச்சரிக்கை ஆகியவற்றை பெற்றுள்ளது.

kia sonet suv

2024 Hyundai Creta

வரும் ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காருக்கு திரைக் கலைஞர் தீபீகா படுகோனை விளம்பர தூதுவராக சமீபத்தில் அறிவித்துள்ள இந்நிறுவனம் கிரெட்டா காரில் தொடர்ந்து என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் டிசைனில் முக்கிய மாற்றங்கள் மற்றும் ADAS பாதுகப்பு தொகுப்பினை மேம்படுத்தியிருக்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டா மாடலில் 115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அடுத்து 116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு இரு என்ஜின் ஆப்ஷனிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ், ஏஎம்டி கிடைக்க உள்ளது.

கூடுதலாக, அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

hyundai creta

2024 Mercedes-Benz GLS

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு தனது முதல் மாடலாக GLS ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரை விற்பனைக்கு ஜனவரி 8 ஆம் தேதி வெளியிட உள்ளது. ஜிஎல்எஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தொடர்ந்து பெற வாய்ப்புள்ளது. 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 மேட்டிக் AWD பெறலாம். இந்த காரின் விலை ரூ.1 கோடி என துவங்கலாம்.

mercedes gls

2024 Mahindra XUV300

புதுப்பிக்கப்பட்ட புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 300 விற்பனைக்கு ஜனவரி மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் நிலையில் 110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல்,  117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். அதிக பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் புதிய 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

மேலும், இந்த காரின் அடிப்படையில் மஹிந்திரா குறைந்த விலை எலக்ட்ரிக் XUV300 விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

mahindra xuv 300 facelift rear spied

2024 Mahindra XUV400 facelift

எலக்ட்ரிக் சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திரா XUV400 காரின் புதிய குறைந்த விலை புரோ வேரியண்ட் விபரம் சமீபத்தில் வெளியானது. 148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் 250 கிமீ ரேஞ்ச், கூடுதலாக வரவுள்ள 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ வெளிப்படுத்துகின்றது.

375km முதல் 456km வரை ரேஞ்ச் வழங்குகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 400 மாடலும் புதுப்பிக்கப்பட்ட டிசைனை பெற உள்ளது. EC Pro மற்றும் EL Pro என இரு விதமான வேரியண்ட் XUV400 விற்பனைக்கு ஜனவரி 2024ல் வாய்ப்புள்ளது.

xuv300 spied

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜிஎஸ்டி., ரூ.4.49 லட்சம் வரை விலை குறையும் கியா கார்கள்

ஜிஎஸ்டி குறைப்பு., ரூ.2.40 லட்சம் வரை விலை குறையும் ஹூண்டாய் கார்கள்

10 ஆண்டுகால கிங் க்ரெட்டா எடிசனை வெளியிட்ட ஹூண்டாய்

10 ஆண்டுகளில் 12 லட்சம் க்ரெட்டா எஸ்யூவிகளை விற்பனை செய்த ஹூண்டாய்

அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா..!

Tags: Hyundai CretaKia SonetMahindra XUV 400Mahindra XUV300Mercedes Benz GLS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Windsor EV inspire edition

எம்ஜி இந்தியாவின் புதிய வின்டசர் EV இன்ஸ்பையர் எடிசன் வெளியானது

காரன்ஸ் கிளாவிஸ்

கியா காரன்ஸ் கிளாவிஸில் புதிய வேரியண்டுகள் வெளியானது

புதிய நிறங்களில் 2025 சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF அறிமுகமானது

ரூ.26.78 லட்சத்தில் காம்பஸ் டிராக் எடிசனை வெளியிட்ட ஜீப்

2025 ஃபார்ச்சூனர் லீடர் எடிசனை வெளியிட்ட டொயோட்டா

நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நவம்பர் 4ல்., ஹூண்டாயின் புதிய வெனியூ எஸ்யூவி அறிமுகத்திற்கு முன்னர் கசிந்தது

2025 மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.99 லட்சத்தில் 2025 மஹிந்திரா பொலிரோ அறிமுகமானது

Upcoming Renault Cars: இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காரை வெளியிடும் ரெனால்ட்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan