ஏமியோ செடான் ரக மாடலில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு வோக்ஸ்வேகன் ஏமியோ ஜிடி லைன் வேரியண்ட் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டு விற்பனைக்கு ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரம் விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.
ஹைலைன் பிளஸ் வேரியண்டை அடிப்படையாக கொண்ட ஜிடி லைன் ஏமியோ காரில் 7 வேக டூயல் கிளட்ச் கியருடன் 110 ஹெச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸை பெற்றுள்ளது. ஏமியோவின் ஜிடி லைன் மைலேஜ் லிட்டருக்கு 21.73 கிமீ ஆகும்.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஏமியோ ஜிடி லைன் மாடல் போலோ மற்றும் வென்டோவின் ஜிடி லைன் பதிப்புகளிலிருந்து ஸ்டைலிங் அம்சங்களை கொண்டுள்ளது. அவற்றை போலவே, இது ஃபெண்டர், பிளாக்-அவுட் விங்-மிரர் கவர், கூரை மற்றும் ஸ்பாய்லர் ஆகியவற்றில் ஜிடி லைன் பேட்ஜைப் பெறுகிறது. இது மற்ற இரண்டோடு வழங்கப்படும் புதிய சன்செட் ரெட் பெயிண்ட் நிழலையும் பெறுகிறது. இருப்பினும், ஏமியோ சாதாரண கிரில் மற்றும் பம்பரை மட்டும் பெறுகின்றது.
ஒற்றை டீசல் வேரியண்டில் மட்டும் கிடைக்கின்ற ஏமியோவின் ஜிடிவிலை ரூ.9.99 லட்சம் ஆகும்.