Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ரூ.33.12 லட்சத்தில் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
March 6, 2020
in கார் செய்திகள்

volkswagen tiguan allspace

2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பெற்ற புதிய போக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் எஸ்யூவி 7 இருக்கை கொண்டதாக விற்பனைக்கு ரூ.33.12 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

7 இருக்கை பெற்றுள்ள ஃபோக்ஸ்வாகன் ஆல்ஸ்பேஸ் மாடலில் 190 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல்  என்ஜின் மட்டும் பெற்றதாக வந்துள்ளது. இதில் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது.

தோற்ற அமைப்பினை பொறுத்தவரை முந்தைய டிகுவான் 5 இருக்கை மாடலை போலேவே அமைந்திருந்தாலும் கூடுதலாக 110 மீமீ வரை நீட்டிக்கப்பட்டு வீல்பேஸ் மறும் 215 மிமீ வரை அதிகரிக்கப்பட்ட நீளத்தைப் பெற்ற இந்த மாடல் தற்போது 7 இருக்கை பெற்றதாக முழுமையான வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.

முழுமையான எல்இடி ஹெட்லைட் உடன் இடம்பெற்றுள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள், பனரோமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை ஏழு ஏர்பேக்கு, ஏபிஎஸ், இஎஸ்பி, டயர் பிரஷர் மானிட்டர் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை கொண்டுள்ளது.

Tags: Volkswagen Tiguan Allspace
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version