ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமாக வோல்க்ஸ்வேகன், தனது புதிய காம்பேக்ட் எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய தேவையான பணிகளை செய்து வருகிறது. இந்த எஸ்யூவிகளை நவீன தலைமுறை போலோ அடிப்டையிலேயே தயாரித்து வருகிறது. இந்த கார்கள் சமீபத்தில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் எதிர்வரும் தயாரிப்பு காம்பேக்ட் எஸ்யூவி போன்றே இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் வோல்க்ஸ்வேகன் போலோ எஸ்யூவி கார்கள் T-கிராஸ் பிரீஸ் கான்ச்பெட்டை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். கடந்த 2016ல் நடந்த ஜெனிவா மோட்டர் ஷோவில் இந்த T-கிராஸ் பிரீஸ் கான்ச்பெட் வெய்யிடப்பட்டது. சர்வதேச மார்க்கெட்கள், இந்த எஸ்யூவி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட T-Roc போன்று இருக்கும் என்று தெரிவித்துள்ளன. இதன் மார்கெட் பெயர் T-Cross என்று இருக்கும். தற்போது வெளியாகியுள ஸ்பை படங்களின் படி, போலோ எஸ்யூவிகள் பெரியளவிலான எஸ்யூவிகளில் இருந்து அதாவது டைகுவன் மற்றும் புதிய-ஜென் டூரெக் போன்றவைகளில் இருந்து பெறப்பட்டதாகவே இருக்கும்.
இந்த சோதனை புகைப்படங்களில் ஹெட்லைட்கள் மற்றும் டைல்லைட்கள் மறைக்கப்பட்ட போதும், இவை VW எஸ்யூவி களில் உள்ள டிசைன் போன்றவே இருக்கும் என்று தெரிகிறது. முன்புற கிரில்கள் முழு அகலத்தில் ஹரிசாண்டலாக உள்ளது. மேலும் இது பெரிய கிரிஸ் உடன் கூடிய டவுட் சர்பேஸ்-ஐயும் கொண்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிகளவிலான பங்கி கலர் ஆப்சன்களும் மற்றும் ஈவன் டூயல்-டோன் பெயின்ட் ஸ்கீம் பயன்படுத்தும் இதில் எதை இந்த கார்களில் பயன்படுத்தும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காரின் உள்பகுதியில், T-கிராஸ் உடன் சில வசதியான மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி இதில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் இடம் பெறும்.
வரும் 2020-க்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 19 எஸ்யூவிகளில், போலோ எஸ்யூவிகள் மட்டுமே T-கிராஸ்-ஐ கொண்டதாக இருக்கும். T-கிராஸ்-ஐ தயாரிப்புகள் வோல்க்ஸ்வேகன் இந்தியா, மார்க்கெட்டில் உறுதியாக இறங்க உதவியாக இருக்கும். இந்த நிறுவனத்தின் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்தியாவில் எஸ்யூவிகளை அறிமுகம் செய்ய உள்ளது. சர்வதேச அளவில், T-கிராஸ்கள், அதிகளவில் பிரபலமான MQB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட உள்ளது.
இந்தியா மார்க்கெட்க்காக சிறப்பாக மேம்படுத்தப்பட்டு காம்பேக்ட் எஸ்யூவிகள் MQB-A0-IN-களில் தயாரிக்கப்பட்டுள்ளது இது எஸ்யூவிகளின் மொத்த நீளத்தை நான்கு மீட்டராக குறைக்கும். இதுமட்டுமின்றி நிறுவனம் தனது உற்பத்தி செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர உதவும். இந்த T-கிராஸ், மாருதி சுசூகி விட்டாரா ப்ர்ஸாஸா, ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் டாடா நெக்ஸோன் கார்களுக்கு போட்டியாக இருக்கும். வோல்க்ஸ்வேகன் T-கிராஸ் இந்தாண்டின் இறுதில் சர்வதேச அளவில் அறிமும் செய்யும் என்று தெரிகிறது. இருந்தபோதிலும், இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்வது 2019ம் ஆண்டு இறுதியிலோ இருந்து 2020 ஆண்டின் முற்பகுதியிலோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.