ரெனால்ட் இந்தியா நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக மை ரெனால்ட் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்டராய்டு என இருதரப்பட்ட பயனார்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது.
மை ரெனால்ட் ஆப்
இந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த நடைமுறை மிக வேகமாக வளர்ந்து வருவதனால் பல்வேறு மோட்டார் நிறுவனங்கள் ஆப் மற்றும் பிரத்யேக இணையதளங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இந்தியா ரெனால்ட் பிரிவு 60 க்கு மேற்பட்ட வசதிகளை பெற்றுள்ள செயலியை ஐஓஎஸ் மற்றும் ஆண்டராய்டு என இரு பிரிவு பயனாளர்களுக்கும் கிடைக்க உள்ளது.
இந்த செயிலில் இ-காமர்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் சர்வீஸ், சர்வீஸ் ரிமைன்டர், அறிவிப்புகள் ரோடு சைட் அசிஸ்டன்ஸ், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன் இ-பேமென்ட்ஸ் வசதி பெற்றதாக வந்துள்ளது. ஒவ்வொரு மாடலில் உள்ள வசதிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களை கொண்டதாக கிடைக்கின்றது.
கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.