கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக இந்தியாவின் முதன்மையான பிரிமியம் மோட்டார் சைக்கிள் நிறுவனமாக ஹார்லி டேவிட்சன் விளங்குகின்றது. இந்திய சந்தையில் 13 மாடல்களை ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்து வருகின்றது.

600 சிசி க்கு மேற்பட்ட உயர்ரக பிரிமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் 60 சதவீத சந்தை பங்களிப்பினை பெற்று விளங்குகின்றது. 601 சிசி க்கு மேற்பட்ட அதிக செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் விற்பனை இந்தியாவில் சில ஆண்டுகளாகவே அமோக வரவேற்பினை பெற்ற பிரிவாக மாறி வருகின்றது.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹார்லி-டேவிட்சன் இந்தியாவில் 21 நகரங்களில் 24 டீலர்களை கொண்டு மிக வலுவான உட்கட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களில் தனது டீலர்களை விரிவுப்படுத்தி வருகின்றது. ஹார்லி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நிதிஉதவி திட்டங்கள் என பலவற்றை செய்லபடுத்திவருகின்றது.

இந்தியா ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சம்மேளனத்தின் விற்பனை விபர அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் 2016 முதல் நவம்பர் 2016 வரை 2470 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள கவாஸாகி 870 மோட்டார் சைக்கிள் , 3வது இடத்தில் ட்ரையம்ப் 750 மோட்டார்சைக்கிள் விற்பனை செய்துள்ளது. மேலும் ரூ.5 லட்சம் விலைக்கு மேல் உள்ள பிரிவிலும் ஹார்லி 901 பைக்குகளும் , கவாஸாகி 761 பைக்குகளும் ட்ரையம்ப் 750 பைக்குகளும் விற்பனை செய்துள்ளது.