வரும் ஜூலை 1ந் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதால் பஜாஜ் ஆட்டோ தனது பைக்குகளுக்கு ரூ.4500 வரை அதிகபட்சமாக சலுகைகளை அறிவித்துள்ளது.
பஜாஜ் பைக்குகள் விலை
ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.
ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.
ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டை சார்ந்த டிராக்டர்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
ப்ரீ-ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி வருகைக்கு முன்னதாக இருப்பில் உள்ள வாகனங்களை விற்பனை செய்யும் நோக்கில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு சலுகைளை வழங்க தொடங்கியள்ளது. கார் நிறுவனங்கள் வழங்கி வந்த நிலையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் 14 முதல் ஜூன் 30 வரை அனைத்து மாடல்களுக்கும் ரூ.4500 வரை விலை சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை இன்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பஜாஜ் டீலர்களிடமும் பெறலாம்.
எந்த மாடலுக்கு எவ்வளவு சலுகை போன்ற விபரங்களை பஜாஜ் ஆட்டோ இதுவரை தெளிவுப்படுத்தவில்லை எனவே மேலதிக விபரங்கள் வரும் வரை இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்..!