கடந்த நவம்பர் 2016 ஸ்கூட்டர் விற்பனை நிலவரப்படி முதல் 10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். தொடர்ச்சியாக முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா வரிசை ஸ்கூட்டர்கள் உள்ளது.
ஒட்டுமொத்த இந்திய இருசக்கர வாகன விற்பனையில் கடந்த சில மாதங்களாக முன்னனி வகித்து வந்த ஆக்டிவா தற்பொழுது ஸ்பிளென்டர பைக்கை விட குறைவான எண்ணிக்கையிலே விற்பனையை பதிவு செய்ய தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க ; விற்பனையில் முதல் 10 பைக்குகள் – நவம்பர் 2016
2வது இடத்தில் 54,838 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து டிவிஎஸ் ஜூபிடர் மாடல் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ மேஸ்ட்ரோ மற்றும் சுஸூகி ஆக்செஸ் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே யமஹா ரே மற்றும் ஃபேசினோ ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை கனிசமான அளவில் உயர்ந்துள்ளது. மொத்த பட்டியல் விபரங்களை கீழே காணலாம்.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2016
வ.எண் | ஸ்கூட்டர் மாடல் விபரம் | நவம்பர் 2016 |
1. | ஹோண்டா ஆக்டிவா | 1,80,811 |
2. | டிவிஎஸ் ஜூபிடர் | 54,838 |
3. | ஹீரோ மேஸ்ட்ரோ | 26,320 |
4. | சுஸூகி ஆக்செஸ் | 24,825 |
5. | ஹீரோ டூயட் | 16,741 |
6. | யமஹா ரே | 14,844 |
7. | ஹோண்டா டியோ | 13,383 |
8. | யமஹா ஃபேசினோ | 13,019 |
9. | ஹீரோ பிளசர் | 10,349 |
10. | டிவிஎஸ் பெப்+ | 7,292 |