ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சான்ட்ரோ கார் பெயரை அடுத்த புதிய ஹேட்ச்பேக் கார் மாடல் பெற வாய்ப்பில்லை என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாலளர் தெரிவித்துள்ளார்.
2018 ஹூண்டாய் ஹேட்ச்பேக் கார்
இந்திய சந்தையில் தொடக்க நிலை சந்தை மற்றும் காம்பேக்ட் ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையிலான பிரிவில் உள்ள டியாகோ, செலிரியோ, க்விட் மற்றும் வரவுள்ள புதிய மாருதி 800 ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும் வகையில் க்ராஸ்ஓவர் ரக மாடல்களின் அடிப்படையில் ஹேட்ச்பேக் கார் ஒன்றை அடுத்த ஆண்டின் மத்தியில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது.
சமீபத்தில் ஃபைனான்ஸ் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த பொது மேலாலளர் மற்றும் விளம்பரப்படுத்துதல் பிரிவு தலைவர் புனீத் ஆனந்த அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு வரவுள்ள ஹேட்ச்பேக் கார் மாடல், தற்போதுள்ள சந்தை நிலவரத்துக்கு ஏற்ற வகையில் புதிய பெயரை பெற்றதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் பெற்றிருக்கின்ற இந்த மாடல் ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.