2019 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்திருந்தாலும், ஒரு சில நிறுவனங்கள் சீரான விற்பனையை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மாருதி சுசுகி விற்பனை கடுமையாகவே பாதிப்படைந்துள்ளது. இந்தியாவிற்கு புதிய நிறுவனங்களான எம்ஜி மோட்டார் மற்றும் கியா மோட்டார்ஸ் கார்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.
ஆல்ட்டோ கார் தொடர்ந்து விற்பனையில் முன்னணி வகிக்கும் நிலையில், தற்போது கூடுதலான விலை கொண்ட மாடல்கள் மீதான மக்கள் கவனம் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பதனை டிசையர் விற்பனை உறுதி செய்துள்ளது. மாருதி டிசையர் கார் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 657 கார்களை விற்பனை செய்து நாட்டின் முதன்மையான காராக விளங்குகின்றது.
வேன் ரக கார்களில் மாருதி ஆம்னி வெளியேறிய நிலையில் அதனை மாருதி ஈக்கோ தக்கவைத்துக் கொண்டுள்ளது. பலேனோ, ஸ்விஃப்ட், வேகன் ஆர் போன்ற கார்களும் தங்கள் பங்கினை சிறப்பாக கொண்டுள்ளது. மாருதியை தவிர டாப் 10 கார்கள் பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா எஸ்யூவி இடம்பெற்றுள்ளது.
எஸ்யூவி ரக மாடல்களில் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 1 லட்சத்து 31 ஆயிரத்து 732 கார்களும், கிரெட்டா எஸ்யூவி 99 ஆயிரத்து 736 யூனிட்டுகளை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் – 2019
வ.எண் | தயாரிப்பாளர்/மாடல் | 2019 |
1. | மாருதி சுசுகி டிசையர் | 2,09,657 |
2. | மாருதி சுசுகி ஆல்ட்டோ | 2,08,087 |
3. | மாருதி சுசுகி ஸ்விஃப்ட் | 1,91,900 |
4. | மாருதி சுசுகி பலேனோ | 1,83,863 |
5. | மாருதி சுசுகி வேகன்ஆர் | 1,55,967 |
6. | மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 1,31,732 |
7. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 1,23,181 |
8 | மாருதி சுசூகி ஈக்கோ | 1,14,105 |
9. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 1,02,693 |
10. | ஹூண்டாய் கிரெட்டா | 99,736 |