இந்தியாவில் அதிகப்படியான சார்ஜிங் நிலையங்களை பெற்ற நகரமாக பெங்களுரூவை மாற்றியமைக்க ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ள நிலையில் மின்சார வாகனங்களுக்கான எத்தர்கிரிட் சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் எனர்ஜி

பெங்களூருவில் , தற்போது 14 க்கு மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை திறந்துள்ள எத்தர் எனர்ஜி இந்த மாத இறுதிக்குள் 30 சார்ஜிங் நிலையங்களை பெங்களூரு மாநகரில் திறக்க திட்டமிட்டுருக்கின்றது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 60 சார்ஜிங் நிலையங்களை பெங்களுரு கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

4 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் நிலையத்தை பெங்களூரு நகரம் முழுவதும்வ திறக்க திட்டமிட்டுள்ள , இந்நிறுவனம், தனது எத்தர் எஸ்340 ஸ்கூட்டருக்கு மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் , நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களையும் இந்த நிலையங்களில் சார்ஜ் செய்ய இயலும். மேலும் எத்தர்கிரிட் சிறப்பு சலுகையாக முதல் 6 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக அனைத்து மின்சார வாகனங்களையும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏத்தர்கிரிட் என்ற பிரத்தியேக செயலியை அறிமுகம் செயதுள்ள இந்நிறுவனம், இந்த செயலி வாயிலாக சார்ஜிங் நிலைய இருப்பிடத்தை அறிய பேட்டரி இருப்பு மற்றும் பேமென்ட் சார்ந்த அம்சங்களை பெறலாம்.

விரைவில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், ஏதர் எஸ்340 என்ற ஸ்கூட்டரை மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்லும் திறனுடன் அதிகபட்சமாக 60 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஸ்கூட்டருக்கு முன்பதிவு ஜூன் மாதம் தொடங்க பெறலாம்.