மதுரை முதல் ஜம்மூ வரை சுமார் 4000 கிமீ நீளத்திற்கு ஒவ்வொரு 300 கிமீ இடைவெளிக்கு சார்ஜரை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ குழுமம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 5,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர்-அகமதாபாத்-மும்பை-புனே-ஹுப்பாளி-பெங்களூரு-கோயம்புத்தூர்-மதுரை போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கிய சார்ஜர் 120kW முதல் 720kW வரை ஆதரிக்கின்ற வழிதடங்களில் மின்வாகன போக்குவரத்து அதிக அளவில் ஏற்றுக்கொள்வதையும் வசதியையும் ஊக்குவிக்க, BMW குரூப் இந்தியா நாட்டில் உள்ள அனைத்து EV பிராண்டுகளின் வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜிங் செய்ய அனுமதிக்கின்றது.
பிரீமியம் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் மால்களில் உள்ள கிட்டத்தட்ட 300 BMW சார்ஜிங் நிலையங்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனம் இந்திய சந்தையில் BMW i7, BMW iX, BMW i5, BMW i4, BMW iX1 லாங் வீல்பேஸ், MINI கன்ட்ரிமேன் E, BMW CE 04 மற்றும் BMW CE 02 உள்ளிட்ட சொகுசு மின்சார கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களை வழங்குகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியாவில் சொகுசு EV விற்பனையில் BMW குரூப் இந்தியா முன்னணியில் உள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி – ஜூன்), 1,322 BMW மற்றும் MINI EVகள் விற்பனையாகி இந்த முன்னணி தொடர்ந்தது. ஆண்டின் முதல் பாதியில் EV விற்பனையில் நிறுவனம் மகத்தான +234% வளர்ச்சியை அடைந்தது. BMW குரூப் இந்தியாவின் மொத்த விற்பனையில் மின்சார கார்கள் இப்போது 18% பங்கைக் கொண்டுள்ளன. இந்த காலகட்டத்தில் BMW iX1 லாங் வீல்பேஸ் அதிக விற்பனையான மின்சார காராக இருந்தது, அதைத் தொடர்ந்து முதன்மையான BMW i7 இரண்டாவது இடத்தில் உள்ளது.