இந்தியாவில் கடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட வர்த்தக வாகன எண்ணிக்கை முதன்முதலாக 10 லட்சம் இலக்கை கடந்து சாதனை படைத்துளது. வர்த்தக வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ முதலிட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் டாடா நிறுவனம், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன விற்பனையில் தொடர்ந்து 50 சதவீததிற்கு மேற்பட சந்தை மதிப்பினை கொண்டுள்ளது. இலகு ரக டிரக்கினை விற்பனை செய்யும் மாருதி சுசூகி சூப்பர் கேரி விற்பனை 135 சதவீத வளர்ச்சி பெற்று ஒரு மாடலின் மூலம் இந்தியாவின் 4 சதவீத சந்தை மதிப்பை மாருதியின் வர்த்தக பிரிவு பெற்றுள்ளது.
வர்த்தக வாகன விற்பனை நிலவரம் – 2018-2019
இந்திய ஆட்டமொபைல் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019 நிதியாண்டில், நாட்டின் மொத்த வர்த்தக வாகன விற்பனை எண்ணிக்கை 1,007,319 ஆகும். இதே காலகடத்தில் முந்தைய 2018 ஆம் ஆண்டில் விற்பனை எண்ணிக்கை 856,916 ஆக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 17.6 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் இந்தியாவின் பஸ், டிரக் போன்ற மாடல்களின் சந்தையின் 86 சதவீத பங்களிப்பை டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
வ.எண் | தயாரிப்பாளர் | FY2019 | FY2018 |
1. | டாடா மோட்டார்ஸ் | 447,323 | 376456 |
2. | மஹிந்திரா | 248,601 | 216,803 |
3. | அசோக் லேலண்ட் | 185,065 | 158,612 |
4. | வால்வோ ஐஷர் (VECV) | 61,732 | 55,872 |
இலகுரக, நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன சந்தையில் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ முன்னிலை வகிக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் கார்கோ டிரக்குகளை தவிர மற்ற வகைகள் சீரான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் டிப்பர் டிரக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.