FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகன ஜூன் 2023 மாத விற்பனை எண்ணிக்கை பெரும் சரிவினை சந்தித்துள்ளது. ஓலா, டிவிஎஸ், ஏதெர் போன்ற நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக மே 2023 எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 1,00,000 கடந்திருந்தது. ஆனால் முந்தைய மே 2023 மாத விற்பனை உடன் ஒப்பீடுகையில், 70 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிலவரம் – ஜூன் 2023
நாட்டின் முன்னணி ஒலா எலக்ட்ரிக் விற்பனை நிலவரம் ஜூன் 2023-ல் 17,552 ஆக பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த மே 2023-ல் 28,629 ஆக பதிவு செய்திருந்தது. டிவிஎஸ் ஐக்யூப் விற்பனை சரிவடைந்துள்ளது.
No | E2W Makers | Sales in May | Sales in June | Growth (%) |
1. | OLA ELECTRIC | 28,629 | 17,552 | -39% |
2. | TVS MOTORS | 20,398 | 7,791 | -62% |
3. | ATHER ENERGY | 15,407 | 4,540 | -71% |
4. | AMPERE ELECTRIC | 10790 | 3,038 | -72% |
5. | BAJAJ CHETAK | 10064 | 2,969 | -70% |
6. | OKINAWA AUTOTECH | 2,907 | 2,615 | -10% |
7. | HERO ELECTRIC | 2,857 | 1,595 | -24% |
8. | PUR ENERGY | 509 | 820 | 61% |
9. | JOY E-BIKES | 363 | 438 | 21% |
10. | OKAYA EV | 3,876 | 425 | -89 |
மற்ற நிறுவனங்களின் பட்டியல் கீழே உள்ள அட்டவனையில் உள்ளது.
image source – autocarpro