கடந்த 2019-2020 ஆம் நிதி ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் துறை மிக கடுமையான வீழ்ச்சி பாதையில் மட்டும் பயணித்து வருகின்ற நிலையில் முதல் 25 இடங்களை பிடித்துள்ள கார்கள் அனைத்தும் முந்தைய 2018-2019 நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் வீழ்ச்சியை மட்டும் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகின்ற கார்களில் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வரும் மாருதி சுசுகி ஆல்ட்டோ காரின் விற்பனை முந்தைய 2019-2020 நிதி ஆண்டுடன் ஒப்பீடுகையில் 26 % வீழ்ச்சியை (2,59,401) பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த 2019-2020 நிதி ஆண்டில் 1,90,814 எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்துள்ளது.
இரண்டாமிடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் முந்தைய (FY2019: 2,23,924) விற்பனை செய்திருந்த நிலையில் 2020 நிதி ஆண்டில் 16 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 1,87,916 எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்திருந்தது.
மூன்றாமிடத்தில் உள்ள மாடலாக பலேனோ மாருதி விளங்கின்றது. இந்த மாடல் முந்தைய (FY2019: 2,12,330) விற்பனை செய்திருந்த நிலையில் 2020 நிதி ஆண்டில் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 1,80,413 எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்திருந்தது.
வரிசை | தயாரிப்பாளர்/மாடல் | FY2020 | FY2019 | வித்தியாசம் |
1. | மாருதி சுசுகி ஆல்ட்டோ | 1,90,814 | 2,59,401 | -26% |
2. | மாருதி சுசுகி ஸ்விஃப்ட் | 1,87,916 | 2,23,924 | -16% |
3. | மாருதி சுசுகி பலேனோ | 1,80,413 | 2,12,330 | -15% |
4. | மாருதி சுசுகி டிசையர் | 1,79,159 | 2,53,859 | -29% |
5. | மாருதி சுசுகி வேகன் ஆர் | 1,56,724 | 1,51,462 | 3% |
6. | மாருதி சுசுகி ஈக்கோ | 1,17,003 | 91,769 | 27% |
7. | விட்டாரா பிரெஸ்ஸா | 1,10,641 | 1,57,880 | -30% |
8. | ஹூண்டாய் எலைட் i20 | 1,08,091 | 1,40,225 | -23% |
9. | ஹூண்டாய் கிராண்ட் i10 | 99,592 | 1,26,041 | -21% |
10. | ஹூண்டாய் வெனியூ | 93,624 | – | – |