விவசாயம் மற்றும் வேளாண்மை சார்ந்த பிரிவில் எண்ணற்ற இந்திய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு முக்கிய பயன்பாட்டு வாகனமாக அமைகின்ற டிராக்டருக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி வரி பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும் பின்னணியில் உள்ள உண்மையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

டிராக்டர் ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில்5%, 12 %, 18% மற்றும் 28 % என  4 விதமான பிரிவுகளில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக வரி விதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பிரிவுகளில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து  மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில்  டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

டிராக்ட்ர்கள்

வேளாண்மை பயன்பாடிற்கான டிராக்டருக்கு தற்போது உள்ள வரி விதிப்பு நடைமுறையின் படி 12-13 % சதவீகிதமாக உள்ள நிலையில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும் போது 12 சதவிதமாக மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், டிராக்டர் தயாரிப்பிற்கான உதிரிபாகங்கள் வரி 28 சதவிகிதமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதரனமாக இந்த நடைமுறையை பார்த்தால் வரி விதிப்பு  தற்போதைய நடைமுறை போலவே காட்சியளித்தாலும், உதிரிபாகங்களுக்கு 28 சதவிகித வரி என்பதனால் சராசரியாக டிராக்ட்ர் விலை ரூ. 30,000 முதல் ரூ. 36,000 வரை விலை உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஜிஎஸ்டி-யால் சொகுசு கார்களுக்கு 43 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டாலும் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் எக்ஸ்-ஃபேக்ட்ரி விலை கொண்ட ஆடம்பர காரின் விலை அதிகபட்சமாக ரூ. 40,000 வரை குறையும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது ஜிஎஸ்டி வருகைக்கு முன்னதாக  ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் ரூ. 1.50 லட்சம் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகின்றது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

ஏழைகள் விரும்பி உண்ணுகின்ற , குடிசை மற்றும் சிறு தொழிலாக நடத்தப்படுகின்ற கடலை மிட்டாய் மற்றும் ஊறுகாய் போன்றவற்றுக்கு 18 சதவிகித வரி, பண்ணாட்டு நிறுவனங்கள் நடத்தும் ஆடம்பரமான சொகுசு அறைகளில் அல்லது வீடு தேடி வரும் பிட்சாவுக்கு  5 சதவிகித வரியை போலவே இந்த செயல்பாடும் அமைந்துள்ளது.

இந்த அரசின் செயல்பாடு நிச்சியமாக பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.