இந்தியாவின் முதன்மையான மற்றும் உலகில் அதிக இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக விளங்குகின்ற ஹீரோ மோட்டோகார்ப் அதிரடியாக 10 பைக்குகளை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் அதிரடி
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஹோண்டா நிறுவனம் ஹீரோவில் இருந்து பிரிந்த பின்னர் படிப்படியாக ஹீரோ தனது சொந்த முயற்சியில் எஞ்சின் உள்பட அனைத்து பாகங்களையும் உருவாக்க தொடங்கியதை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக சில மாடல்களை நீக்கி வந்தாலும் தற்போது அதிரடியாக குறைவான எண்ணிக்கையில் விற்பனை ஆகின்ற 10 மாடல்களை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.
நீக்கப்பட்ட மாடல்களின் விபரம் பின் வருமாறு ;-
- ஹீரோ எக்ஸ்டீரிம்
- ஹீரோ ஹங்க்
- ஹீரோ கரீஷ்மா ஆர்
- ஹீரோ இக்னிட்டர்
- ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ
- ஹீரோ பேஸன் டிஆர் ப்ரோ
- ஹீரோ ஸ்பிளென்ட்ர் ஐஸ்மார்ட்
- ஹீரோ ஸ்பிளென்ட்ர் NXG
- ஹீரோ ஸ்பிளென்ட்ர் கிளாசிக்
- ஹீரோ எச்எஃப் டான்
நீக்கபட்ட மாடல்களில் பெரும்பாலான மாடல்களுக்கு மாற்றாக சில மாடல்களை கிடைக்கின்றது 150 சிசி பிரிவில் நீக்கப்பட்ட ஹங்க் மற்றும் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றுக்கு மாற்றாக தற்போது 150சிசி சந்தையில் ஹீரோ அச்சீவர் மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் கிடைக்கின்றது.
ஹீரோவின் உயர்ரக மாடலான கரீஷ்மா ஆர் நீக்கப்பட்டாலும் கரீஷ்மா ZMR தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. 100 மற்றும் 125 சிசி சந்தைகளில் நீக்கப்பட்டுள்ள மாடல்கள் பெரும்பாலும் விற்பனையில் சோபிக்காத மாடல்களே ஆகும்.
இந்த மாடல்களை நீக்கியிருந்தாலும் ஹீரோ அதிரடியாக 6 புதிய பைக் மாடல்களை அடுத்த சில மாதங்களுக்கு அறிமுகம் செய்ய தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதில் முற்றிலும் புதிய மாடல்களாக எக்ஸ்ட்ரிம் 200 எஸ் மற்றும் ஹெக்எக்ஸ் 250ஆர் உள்பட 125சிசி பிரிவில் ஸ்கூட்டர் போன்ற சில மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.