இந்திய பயணிகள் வாகன சந்தையில் கார்கள் விலையை பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஜனவரி முதல் உயர்த்த உள்ள நிலையில், ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் 4 சதவீத விலையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனம் உட்பட மாருதி, பிஎம்டபிள்யூ, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு ரெனோ, நிசான் மற்றும் டட்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜனவரி 1, 2019 முதல் விலையை உயர்த்த உள்ளது.
உற்பத்தி மூலப்பொருட்களின் செலவினங்கள் மற்றும் மாறிவரும் அன்னிய செலவானி போன்றவற்றை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 4 சதவீத விலை உயர்வினை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ரூ. 4.73 லட்சம் தொடங்கிய ஹோண்டா பிரியோ முதல் ரூ. 43.21 லட்சம் வரையிலான ஹோண்டா அக்கார்டு ஹைபிரிட் கார் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது