இந்தியாவில் கடந்த பிப்ரவரி 2017ல் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் கார் விற்பனை நிலவரம் பற்றி காணலாம். மாருதி சுசூகி நிறுவனம் கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 11.7 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

கார் விற்பனை நிலவரம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடந்த சில வாரங்களாகவே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா , க்ரெட்டா , க்விட் , பலேனோ , டியாகோ , ஃபார்ச்சூனர் ,இன்னோவா க்ரீஸ்ட்டா போன்ற கார்கள் அபரிதமான சந்தை மதிப்பினை தொடர்ந்து பெற்று வருகின்றன.

  • மாருதி சுசூகி

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளாரக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் பிப்ரவரி மாத முடிவில் 120,599 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 108,115 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 11.7 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது. பிப்ரவரி 2017ல்

இவற்றில் முக்கியமான மாடல்களாக ஆல்ட்டோ 800 , ஸ்விஃப்ட் , விட்டாரா பிரெஸ்ஸா , பலேனோ போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • ஹூண்டாய் இந்தியா

இந்தியாவின் இரண்டாவது கார் தயாரிப்பாளாரக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம் பிப்ரவரி மாத முடிவில் 42,327 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 40,716 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 4 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக க்ரெட்டா , கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • மஹிந்திரா & மஹிந்திரா

யுட்டிலிடி ரக சந்தையில் முன்னணி வகிக்கின்ற மஹித்திரா நிறுவனத்தின் விற்பனை பிப்ரவரி மாத முடிவில் 20,605 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 23,718 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 14 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 மற்றும் கேயூவி100 போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • ஹோண்டா கார்ஸ்

இந்தியாவின் ஹோண்டா கார் பிரிவு கடந்ந மாத முடிவில் பிப்ரவரி மாத முடிவில் 14,249 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 13,020 கார்கள் விற்பனை செய்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 9.4 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக புதிய சிட்டி , அமேஸ் , பிரியோ மற்றும் பிஆர்-வி போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் டாடா மோட்டார்சின் பயணிகள் கார் பிரிவின் விற்பனையில் பிப்ரவரி மாத முடிவில் 12,272 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 10,728 கார்கள் விற்பனை செய்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 12 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக புதிய ஹெக்ஸா , டியாகோ போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • டொயோட்டா க்ரிலோஷ்கர்

இந்தியாவின் பிரிமியம் எஸ்யூவி சந்தையில் 70 சதவீத பங்களிப்பினை ஃபார்ச்சூனர் பெற்று கடந்த பிப்ரவரி மாத முடிவில் 2,027 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த வருடம் விற்பனைக்கு வந்த இன்னோவா க்ரீஸ்ட்டா கார் 65,000 இலக்கினை கடந்துள்ளது.

பிப்ரவரி மாத முடிவில் 11,543 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 10,312 கார்கள் விற்பனை செய்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 12 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக ஃபார்ச்சூனர் , இன்னோவா க்ரீஸ்ட்டா போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • ரெனோ இந்தியா

க்விட் காரின் வெற்றியை தொடர்ந்து அபரிதமான வளர்ச்சியை எட்டியுள்ள ரெனோ இந்தியா பிப்ரவரி மாத முடிவில் 11,198 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 8,834 கார்கள் விற்பனை செய்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 26.8 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல் ரெனோ க்விட் ஆகும்.

 

  • ஃபோர்டு இந்தியா

அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய பிரிவு பிப்ரவரி மாத முடிவில் 8,338 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 5,483  கார்கள் விற்பனை செய்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 52 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக ஃபிகோ ,இக்கோஸ்போர்ட் மற்றும்  ஃபார்ச்சூனர் போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

  • நிசான் இந்தியா

நிசான் இந்தியா நிறுவனத்தின் டட்சன் பிராண்டு மற்றும் நிசான் கார்களின்  பிப்ரவரி மாத முடிவில் 4,807 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 2016ல் 3,850 கார்கள் விற்பனை செய்துள்ளது.  கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் 24.96 சதவீத கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவற்றில் முக்கியமான மாடல்களாக டட்சன் ரெடி-கோ ,மைக்ரா மற்றும் சன்னி போன்ற மாடல்கள் விளங்குகின்றது.

* மற்ற நிறுவனங்களின் கார் விற்பனை நிலவரம்