கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் டாப் 10 இடங்களை பெற்ற சிறந்த கார்களின் பட்டியலை காணலாம். முதலிடத்தில் மாருதி சுஸூகி டிசையர் கார் இடம்பெற்றுள்ளது.
சிறந்த 10 கார்கள்
நடந்து முடிந்த 2018 ஆம் ஆண்டில் மாருதி சுஸூகி நிறுவனம் மொத்த கார் விற்பனை சந்தையில் 50 சதவீதத்துக்கு கூடுதலான சந்தை மதிப்பை பெற்று விளங்குகின்றது. இந்நிறுவனத்தின் மாருதி டிசையர், ஆல்டோ, ஸ்விஃப்ட், பலேனோ, வேகன்ஆர், பிரெஸ்ஸா போன்ற கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1 . மாருதி டிசையர்
13 ஆண்டுகளாக முன்னணி வகித்து வந்த மாருதி ஆல்டோ காரை பின்னுக்கு தள்ளி மாருதி சுஸூகி டிசையர் கார் 2,64,612 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய 2017 ஆம் ஆண்டை விட 17.58 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2017-ல் 2,25,043 யூனிட்டுகளை விற்பனை செய்திருந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளை பெற்று விளங்கும் மாருதி டிசையர் காரில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸை பெற்று விளங்குகின்றது. மாருதி சுஸூகி டிசையர் கார் விலை ரூ.5.60 லட்சம் முதல் ரூ.9.45 லட்சம் வரை அமைந்திருக்கின்றது.
2. மாருதி ஆல்டோ
மாருதி டிசையர் காரின் அதிரடி விற்பனையால் 13 ஆண்டுகளாக முன்னணி வகித்து வந்த ஆல்டோ காரை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தில் உள்ளது. கடந்த 2017-ல் ஆல்டோ கார் விற்பனை எண்ணிக்கை 2,57,732 ஆக இருந்த நிலையில் , கடந்த 2018-ல் 0.42 சதவீத சரிவை கண்டு 2,56,661 ஆக அமைந்துள்ளது.
ஆல்டோ கார் தற்போது 800சிசி மற்றும் ஆல்டோ கே10 மாடல் 1லிட்டர் என்ஜின் பெற்றதாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர் என இரண்டிலும் கிடைக்கின்றது. மாருதி ஆல்டோ கார் விலை ரூ. 2.53 லட்சம் – ரூ.3.80 லட்சம் ஆகும்.
3. மாருதி ஸ்விஃப்ட்
மாருதி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடல்களில் ஒன்றாக விளங்கும் ஹேட்ச்பேக் ரக மாருதி ஸ்விஃப்ட் கார் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்விஃப்ட் கார் 2018-ல் மொத்தமாக 2,23,630 யூனிட்டுகளை விற்றுள்ளது. 2017யில் சுமார் 1,67,371 ஆக அமைதிருந்தது. இது முந்தைய ஆண்டை விட 33.61 சதவீத வளர்ச்சியாகும்.
மாருதி ஸ்விஃப்ட் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான தேர்வுகளில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் கார் விலை ரூ. 4.99 லட்சம் முதல் ரூ.8.76 லட்சம் ஆகும்.
4. மாருதி பலேனோ
பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுஸூகி பலேனோ கார் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2017-ல் பலேனோ 1,77,209 யூனிட்டுகளும், அதனை விட 18.64 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்று 2,10,636 யூனிட்டுகள் ஆகும்.
பலேனோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டு தேர்வுகளில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என இரண்டிலும் இடம்பெற்றுள்ளது. மாருதி சுஸூகி பலேனோ கார் விலை ரூ.5.38 லட்சம் முதல் ரூ.8.35 லட்சம் ஆகும்.
5. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
யுட்டிலிட்டி சந்தையில் பிரசத்தி பெற்று விளங்கும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கடந்த 2018 ஆம் வருடாந்திர விற்பனை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள பிரெஸ்ஸா 1,55,466 ‘யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 2017-ல் சுமார் 1,40,945 கார்களை விற்பனை செய்திருந்தது.
விட்டாரா பிரெஸ்ஸா டீசல் என்ஜின் தேர்வில் மட்டும் விற்பனை செய்யபடுகின்றது. இந்த காரில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா விலை ரூ. 7.58 லட்சம் முதல் ரூ.10.55 லட்ம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
6. மாருதி வேகன்ஆர்
டால்பாய் ஹேட்ச்பேக் என்ற பெருமையை பெற்ற வேகன்ஆர் காரின் புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டு சுமார் 1,52,020 யூனிட்டுகள் விற்பனை செய்து முந்தைய ஆண்டை விட 10.30 சதவீத சரிவடைந்து 1,66,814 யூனிட்டுகளை கடந்த 2017ல் விற்பனை செய்திருந்தது.
மாருதி சுஸூகி வேகன்ஆர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் கிடைக்கின்றது. மாருதி வேகன்ஆர் விலை ரூ.4.15 லட்சம் முதல் ரூ.5.36 லட்சம் ஆகும்.
7. ஹூண்டாய் எலைட் ஐ10
பலேனோ காருக்கு போட்டியாக விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் எலைட் ஐ10 மாடல் 2017-ல் 1,34,103 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் 1,41,104 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எலைட் ஐ20 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விலை ரூ.5.43 லட்சம் முதல் ரூ.9.23 லட்சம் ஆகும்.
8. ஹூண்டாய் கிராண்ட் ஐ20
இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2017-ல் கிராண்ட் ஐ10 கார் 1,54,787 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டில் 1,34,249 யூனிட்டுகளை விற்றுள்ளது.
கிராண்ட் ஐ10 காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இரண்டிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் விலை ரூ.4.91 லட்சம் முதல் ரூ.7.52 லட்சம் ஆகும்.
9. ஹூண்டாய் க்ரெட்டா
எஸ்யூவி சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு எதிராக உள்ள ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி கடந்த 2017-ல் 1,05,484 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு முந்தைய வருடத்தை விட 14.62 சதவீத வளர்ச்சி பெற்று 2018-ல் 1,20,905 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா விலை ரூ.9.50 லட்சம் முதல் ரூ.15.10 லட்சம் ஆகும்.
10. மாருதி செலிரியோ
மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்களில் மொத்தம் 8 கார்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 10 வது இடத்தில் நாட்டின் முதல் ஆட்டோமேட்டிக் மேனுவல் காராக வெளிவந்த செலிரியோ இடம்பெற்றுள்ளது. 2018ல் மொத்தமாக 1,00,957 யூனிட்டுகள் விற்பனை ஆகி முந்தைய வருடத்துடன் ஒப்பீடுகையில் 0.10 சதவீத வளர்ச்சி பெற்றது. 2017ல் செலிரியோ கார் விற்பனை 1,00,860 ஆக இருந்தது.
செலிரியோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில் ஏஎம்டி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டிலும் உள்ளது. மாருதி சுஸூகி செலிரியோ கார் விலை ரூ. 4.21 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் ஆகும்.
2018 ஆம் ஆண்டின் விற்பனையில் டாப் 10 கார்கள்
வ. எண் | தயாரிப்பாளர் | 2018 | 2017 |
1. | மாருதி சுசூகி டிசையர் | 2,64,612 | 2,25,043 |
2. | மாருதி சுசூகி ஆல்டோ | 2,56,661 | 2,57,732 |
3. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 2,23,630 | 1,67,731 |
4. | மாருதி சுசூகி பலேனோ | 2,10,236 | 1,77,209 |
5. | மாருதி சுசூகி விட்டாரா பிரெஸ்ஸா | 1,55,466 | 1,40,945 |
6. | மாருதி வேகன் ஆர் | 1,52,020 | 1,66,814 |
7. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 1,41,104 | 1,34,103 |
8. | ஹூண்டாய் கிராண்ட் ஐ10 | 1,34,249 | 1,54,787 |
9. | ஹூண்டாய் கிரெட்டா | 1,20,905 | 1,05,484 |
10. | மாருதி செலிரியோ (Automobile Tamilan) | 1,00,957 | 1,00,860 |