Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

இந்தியாவில் மிகப்பெரிய லித்தியம்-அயன் பேட்டரி தொழிற்சாலை தேவை – நிதி அயோக்

by automobiletamilan
October 9, 2017
in வணிகம்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

MahindraVeritoelectricவருகின்ற 2030 ஆம் ஆண்டு முதல் மின்சார கார்களை மட்டுமே நாடு முழுவதும் இயக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளை பூர்த்தி செய்யும் வகையிலான மிகப்பெரிய தொழிற்சாலை அவசியம் என நிதி அயோக் அமைப்பு உறுப்பினர் வி. கே. சரஸ்வத் தெரிவித்துள்ளார்.

லித்தியம்-அயன் பேட்டரி தொழிற்சாலை

tesla charging

2030 முதல் எரிபொருள் இறக்குமதி செலவை குறைக்கவும், மிகவும் சவாலான விலையில் பயனாளர்கள் மின்சார வாகனங்களை பெற வேண்டுமெனில் ” உலகளவில் இந்தியாவில் மிகப்பெரிய லித்தியம்-அயன் பேட்டரி ஆலை மற்றும் மின்சார கார்களுக்கான உயர் ரக நுட்பங்களை கொண்ட நாடாக விளங்க வேண்டும் ” என பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி. கே. சரஸ்வத் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கினைப்பது அல்லது முழுமையாக பாகங்களை இறக்குமதி செய்யும் பட்சத்தில் இலக்கை அடைவது சாத்தியமில்லை. இதன் காரணமாக பேட்டரி இறக்குமதிக்கு சீனா அல்லது ஜப்பான் போன்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டும் என்பதனால் இதன் தரம் கேள்விக்குரியதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

electric car charging station

மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்கு ஏற்ப புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களான சூரிய சக்தி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றின் திறனை அதிகரிப்பதுடன், எல்க்ட்ரிக் வாகனங்களுக்கு என மின்சார சார்ஜிங் மையங்களை ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் ஏற்படுத்துவது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

மின்சார கார்களின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசு சமீபத்தில் இந்திய அரணி பல்வேறு துறைகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பெறுவதற்கு ஆற்றல் திறன் சேவைகள் லிமிடெட் வாயிலாக 10,000 கார்களுக்கு டாடா மோட்டார்ஸ் ஆர்டரினை பெற்றுள்ளது.

2016 Tesla Model X

வரும் 2025 ஆண்டு முதல் மின்சார கார்கள் மற்றும் பாரம்பரிய எரிபொருள் கார்கள் என இரண்டின் விலையும் சமமாக இருக்கும் என நிசான் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் டான்லியே ஷில்லாயி குறிப்பிட்டுள்ளார்.

Tags: Electric Vehicle News TamilLithium-ion batteryNITI Aayogஇந்தியாநிதி ஆயோக். லித்தியம் -அயன் பேட்டரி
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan