நாட்டின் முன்னணி டிராக்டர் தயாரிப்பாளர்களில் ஒன்றான டாஃபே மற்றும் டிஎம்டிஎல் (TAFE & TMTL) நிறுவனங்களோடு, இணைந்து இந்தியாவின் பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி டிராக்டர் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் நிதியுதவி வழங்க ஒப்பந்தம், இந்தியன் வங்கியின் செயலாக்க இயக்குனர் திரு. இம்ரான் அமீன் சித்திகி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
டாஃபே நிறுவனத்தின் கீழ் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் ( Massey Ferguson – MF), டாஃபே டிராக்டர், IMT டிராக்டர் ஆகியவற்றுடன் TMTL கீழ் ஐஷர் டிராக்டர்கள் விற்பனைக்கு நாடு முழுவதும் கிடைத்து வருகின்றது.
Tafe Tractors
சிரமமின்றி கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் ஆதாயத்தோடு சேர்த்து எளிய வட்டி விகிதங்களில் டிராக்டர்களை வாங்குவதற்கான கடன் திட்டத்தைப் பெற்று பயனடைய விவசாயப் பெருமக்களுக்கும் மற்றும் பிற நபர்களுக்கும் திறனதிகாரத்தை வழங்கும்.
டிராக்டரை வாங்க ஆர்வமுள்ள நபர்கள், நாடெங்கிலும் 5700-க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டு வங்கி சேவைகளை வழங்கி வரும் இந்தியன் வங்கியின் எந்தவொரு கிளையையும் நேரில் அணுகி, அதற்கான நிதியுதவியைப் பெறலாம்.
இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கிசேவை/SLBC/RRB துறையின் பொது மேலாளர் திரு. வி. சந்திரசேகரன் இந்நிகழ்ச்சியின் போது பேசுகையில், “நாடெங்கிலும் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் மற்றும் சிரமமின்றியும் டிராக்டர்களை வாங்குவதற்கான கடன்களை வழங்குவதற்கு டாஃபே மற்றும் டிஎம்டிஎல் என்ற இந்நாட்டின் பிரபல டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை எங்களுக்கு உதவும். நாடெங்கிலும் 5700-க்கும் அதிகமான எண்ணிக்கையில் கிளைகளை கொண்டு, வலுவான செயலிருப்பு, பரவலான செயற்பரப்பு மற்றும் சிறப்பான சேவை வழங்கல் என அனைத்து அம்சங்களிலும் இந்தியன் வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டு 2023-24-ல் டிராக்டர்கள் வாங்குவதற்கான நிதியுதவிக்கு ரூ.500 கோடி என்ற தொகைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறினார்.
டாஃபே மற்றும் டிஎன்டிஎல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி திரு. பரமேஸ்வர ரெட்டி தேவி, இந்தியன் வங்கியுடனான இந்த கூட்டுவகிப்பு ஒத்துழைப்பு குறித்து கூறியதாவது: “இந்தியன் வங்கியுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை, டாஃபே மற்றும் டிஎம்டிஎல் – ன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக எளிதான நிதி திட்டங்களையும், கடன் திட்டங்களைப் பெறுவதற்கு விருப்பத்தேர்வுகளை வழங்கும். மேலும், டிராக்டரை சொந்தமாக வாங்க வேண்டுமென்ற அவர்களது கனவுகளை நிஜமாக்குவதற்கு, நிதியுதவி பெறும் அனுபவத்தை எளிதானதாகவும், சிரமமற்றதாகவும் மாற்றும்.”
இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கிச்சேவைக்கான பொது மேலாளர் திரு. மணி சுப்ரமணியன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறைக்கான பொது மேலாளர் திரு. நரேந்திர குமார் ஷர்மா மற்றும் சிஎம்எஸ் துறையின் தலைவர் திரு. சௌரப் டால்மியா உட்பட, இவ்வங்கியின் உயரதிகாரிகள் இந்த ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ளப்படும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.