2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிறப்பான வரவேற்பினை தக்கவைத்துக் கொண்டு தற்பொழுது இரண்டாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா, க்ரெட்டா என்-லைன், க்ரெட்டா எலக்ட்ரிக் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
iX25 என அறியப்பட்டு பயணத்தை துவங்கிய க்ரெட்டா அமோகமான வரவேற்பினை நடுத்தர எஸ்யூவி சந்தையில் பெற்று ஒட்டுமொத்தமாக 12.68 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ள நிலையில், இந்தியா தவிர இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சுமார் 13 நாடுகளுக்கு க்ரெட்டா விற்பனை செய்யப்படுகின்றது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணிக்கை 2.89 லட்சமாக ஆக உள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கிறது, இதன் விலை ரூ.11.11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. கூடுதலாக, இந்த எஸ்யூவி இப்போது எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக விலை ரூ.17.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.