ஃபியட் கிறைஸலர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை அதிகபட்சமாக ரூ.80,000 வரை விலை உயர்த்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காம்பஸ் எஸ்யூவி விலை
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி மாடலாக விளங்கும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை மாடலை தவிர மற்ற வேரியன்ட்கள் விலை அதிகபட்சமாக ரூ.80,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.15.16 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்ட காம்பஸ் எஸ்யூவி அதிகபட்மாக ரூ.21.73 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.
தற்போது அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு விலையை அதிகரிப்பதாக ஜீப் அறிவித்துள்ளது. ஆனால் தொடக்கநிலை வேரியன்ட் விலை மட்டும் அதிகரிக்கப்படாது என குறிப்பிட்டுள்ளது.
விற்பனைக்கு வந்த நான்கு மாதங்களிலே 10,000 க்கு மேற்பட்ட காம்பஸ் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மாடலில் 160 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 170 hp பவருடன், 260 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 7 வேக டூயல் கிளட்ச் கியராபாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வருகின்றது.