இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் கவாஸாகி பைக்குகள் விலை 7 சதவீதம் வரை விலை உயர்வினை ஏப்ரல் 1, 2019 முதல் செயற்படுத்தப்பட உள்ளது. அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் நிலையற்ற அன்னிய செலவானி போன்ற காரணத்தால் விலை உயர்வினை கவாஸாகி பைக்குகள் சந்திக்கின்றது.

இந்திய சந்தையில் கவாஸாகி மோட்டார்ஸ் நிறுவனம், சூப்பர் ஸ்போர்ட்ஸ், ஆஃப்ரோடு, நேக்கடூ , சூப்பர் டூரர் மற்றும் க்ரூஸர் என பல்வேறு பிரிவுகளில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகின்றது.

கவாஸாகி பைக் விலை உயருகின்றது

இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம், தனது பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களை சிகேடி முறையில் விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக உதிரிபாகங்களை இறக்குமதி செய்து உள்நாட்டில் உள்ள சக்கன் ஆலையில் ஒருங்கிணைத்து விற்பனைக்கு வெளியிட்டு வருகின்றது.

மாறி வரும் அன்னிய செலவானி மதிப்பு மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் அதிகபட்சமாக தற்போது டெல்லி எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்படுகின்ற விலையை விட 7 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது.

இந்திய சந்தையில் கவாஸாகி நின்ஜா 300, நின்ஜா 400, நின்ஜா 650, நின்ஜா 1000 உட்பட மொத்தம் 29 மாடல்களை கவாஸாகி மோட்டார்ஸ் இந்தியா விற்பனை செய்து வருகின்றது. அதிகார்வப்பூர்வ விலை விபரம் ஏப்ரல் 1, 2019 வெளியாக உள்ளது.