Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

கியா மோட்டார்ஸ் இந்தியாவில் களமிறங்குகின்றது

by automobiletamilan
April 28, 2017
in வணிகம்

ரூ. 7050 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ள கியா மோட்டார்ஸ் இந்தியா தொழிற்சாலை 2019 ஆம் ஆண்டின் இறுதியில் செயல்பட தொடங்கும் என அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள ஆனந்தப்பூர் மாவடத்தில் கியா ஆலை அமைக்கப்பட உள்ளது.

 

கியா மோட்டார்ஸ் இந்தியா

  • ரூபாய் 7050 கோடி முதலீட்டில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • முதல் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் தொடங்கப்படலாம்.
  • ஆலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் இந்தாண்டின் இறுதியில் தொடங்கப்படும்.
  •  உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கார் சந்தையாக இந்தியா விளங்குகின்றது.

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற தென் கொரியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான இறுதிகட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள அனந்தப்பூர் மாவடத்தில் $ 1.1 பில்லியன் முதலீட்டில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3,00,000 லட்சம் பயணிகள் வாகனம் தயாரிப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆந்திர அரசு மற்றும் கியா நிறுவனத்துக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது.  ஆலை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை இந்த வருடத்தின் மூன்றாவது காலண்டின் இறுதியில் தொடங்கப்படக்கூடும்.  உலகின் ஐந்தாவது மிகப்பெரிய கார் சந்தையாக இந்தியா விளங்குகின்றது.

536 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக காம்பேக்ட் ரக செடான் மற்றும் காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கியா அறிவித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டாலும் கியா கார்கள் தனக்கான தனியான அடையாளத்தை இந்திய சந்தையில் வெளிப்படுத்தும்.

கியா நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் தனியான செயல்பாட்டையே தொடர்ந்து மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான குழப்பங்களும் ஏற்படாத வகையில் இரு பிராண்டுகளும் செயல்படும் , ஆந்திராவில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையில் மிக சிறப்பான மாடல்களை களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனியான டீலர்கள் நெட்வொர்க் மற்றும் நாடு முழுவதும் விரைவான வகையில் சேவை வழங்கும் நோக்கில் செயல்பட திட்டமிட்டுள்ளது.

உலகயளவில் கியா மோட்டார்ஸ் பல்வேறு நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. இந்தியாவில் அமைக்கப்பட உள்ள ஆலையின்வாயிலாக கியா நிறுவனத்தின் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 15 ஆக அதிகரிக்கும்.

இந்தியாவில் முதற்கட்டமாக 2019 ஆம்ஆண்டின் இறுதியில் உற்பத்தி தொடங்க திட்டமிட்டுள்ள கியா நிறுவனம் ரியோ செடான் மற்றும் ஸ்போர்டேஜ் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யக்கூடும். மேலும் இந்த நிறுவனத்தின் பிகான்டோ , ரியோ , சோல் , ஸ்டிங்கர் போன்ற மாடல்களும் இந்தியா வரலாம்.

Tags: Kiaபிகான்டோஸ்டிங்கர்
Previous Post

ஸ்கூட்டர் நாயகன் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் சாதனை

Next Post

கொளுத்தும் 40 டிகிரி வெயிலிலும் உங்கள் பைக்கை ஜில்லென வைத்திருக்கு சில டிப்ஸ்

Next Post

கொளுத்தும் 40 டிகிரி வெயிலிலும் உங்கள் பைக்கை ஜில்லென வைத்திருக்கு சில டிப்ஸ்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version