உச்சநீதிமன்ற அதிரடி தீர்ப்பை தொடர்ந்து மார்ச் மாத இறுதி தினங்களில் பரபரப்பாக இயங்கி ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் 18 ஆயிரம் பி எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக பங்கு சந்தையில் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா பி எஸ் 3 வாகனங்கள்

  • ஏப்ரல் 1 முதல் பி எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது.
  • மஹிந்திரா நிறுவனம் 18,000 பி.எஸ்3 வாகனங்களை இருப்பில் வைத்துள்ளது.
  • இவற்றில் இருசக்கர வாகனம் முதல் கனரக வர்த்தக வாகனங்கள் வரை அடங்கும்.

ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 30 மற்றும் 31ந் தேதி இந்தியா வாகன சந்தையில் எண்ணற்ற சிறப்பு விலை சலுகைகளை வாகன நிறுவனங்கள் வாரி வழங்கிய பொழுதும் விற்பனை செய்யப்பாடமல் உள்ள பி.எஸ் 3 வாகனங்களின் இருப்பு விபரங்களை மோட்டார் நிறுவனங்கள் வெளியிட தொடங்கியுள்ளது. அந்த வகையில் மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வரத்தக வாகனங்கள் வரை பி.எஸ்3 மாசு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் பொருத்திய மாடல்களை 18,000 வரை இருப்பில் உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வாகனங்களில் சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , மேலும் சிலவற்றை பி.எஸ் 4 முறைக்கு மாற்ற உள்ளதாக மகேந்திரா தெரிவித்துள்ளது.

பி.எஸ் 4 நடைமுறையை அமலுக்கு வந்ததை ஒட்டி வர்த்தக வாகனங்கள் 6 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை விலை உயர்வினை பெறுவதனால் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் ரூபாய் 3,000 முதல் ரூபாய் 4000 வரை பெரும்பாலான மாடல்கள் விலை உயர்வினை சந்தித்துள்ளது. அதிகபட்சமாக கனரக வாகனங்கள் ரூபாய் 2 லட்சம் வரை விலை உயர்ந்துள்ளதாக மகேந்திரா தகவல் வெளியிட்டுள்ளது.