மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி அறிமுகம் செய்துள்ள புதிய இ-ஆல்ஃபா சூப்பர் மூன்று சக்கர ஆட்டோரிக்ஷா விலை ரூ.1.61 லட்சத்தில் வெளியாகியுள்ளது. இ-ரிக்ஷாக்களுக்கான விற்பனை ஆனது மாநில அரசுகளின் ஒப்புதலைப் பொறுத்து கிடைக்கிறது.
இ-ஆல்ஃபா சூப்பர் மாடலில் 140 Ah லெட் ஆசிட் பேட்டரி கொண்டதாக உள்ள ஆட்டோரிக்ஷாவின் முந்தைய மாடலை விட 20% ரேஞ்சு ஆனது அதிகமாக வழங்குவதாக இந்நிறுவனம் கூறுகிறது. மோட்டார் 1.64 kW பவர், 22 Nm டார்க் உருவாக்குகிறது,
Mahindra e-alfa super
தினசரி மற்றும் அதிகப்படியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள இ-ஆல்ஃபா மாடலினை முழுமையாக சார்ஜ் செய்வதனால் 95+ கிமீ வரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. D+4 இருக்கை அமைப்பை கொண்டுள்ள மாடலின் வீல்பேஸ் 2168 mm ஆகும்.
மஹிந்திரா தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை வாங்கும் போது ஓட்டுநருக்கு ₹ 10 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
இ-ஆல்ஃபா ஆட்டோவுக்கு 12 மாத உத்தரவாதத்துடன் வருகின்றது. 18A சார்ஜரை கொண்டதாக வரும் நிலையில் விரைவு சார்ஜ் செய்யும் ஆப்ஷனை வழங்குகிறது; பேட்டரி வாரண்டி 18 மாதங்கள் வழங்கப்படுகின்றது.